PT 2.4.9

பாவத்தை அழிக்கும் திருநீர்மலை

1086 பேசுமளவன்றுஇதுவம்மின்நமர்!
பிறர்கேட்பதன்முன், பணிவார்வினைகள் *
நாசமதுசெய்திடுமாதன்மையால்
அதுவேநமதுஉய்விடம் நாள்மலர்மேல்
வாசமணிவண்டறைபைம்புறவில்
மனமைந்தொடுநைந்துழல்வார் * மதியில்
நீசரவர்சென்றடையாதவனுக்குஇடம்
மாமலையாவதுநீர்மலையே.
PT.2.4.9
1086 pecum al̤avu aṉṟu itu vammiṉ * namar piṟar keṭpataṉ muṉ paṇivār viṉaikal̤ *
nācam atu cĕytiṭum ātaṉmaiyāl * atuve namatu uyviṭam nāl̤ malar mel **
vācam aṇi vaṇṭu aṟai paim puṟaviṉ * maṉam aintŏṭu naintu uzhalvār matiil *
nīcar-avar cĕṉṟu aṭaiyātavaṉukku iṭam * mā malai āvatu-nīrmalaiye-9

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1086. This greatness of the Lord’s nature cannot be spoken of fully, O people! Before skeptics mock or question, come, listen well. These divine truths, when heard, destroy the sins of those who bow in devotion. These truths alone are the means for our liberation. But the foolish chase pleasures of the five senses, their minds worn down, they wander aimlessly, never reaching the One who is beyond all reach. That Lord, who cannot be attained by the unfaithful, dwells where bees hum in fragrant groves, drawn to the fresh scent on opened blossoms. His sacred abode is the noble hill: Thirunīrmalai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
இது இந்த பகவத்விஷயத்தின் சீர்மை; பேசும் அளவு அன்று சொல்லி முடிக்க முடியாது; நமர்! நம்முடையவர்களே! இந்த சீரிய அர்த்தத்தை; பிறர் நாஸ்திகர்கள்; கேட்பதன் முன் கேட்பதற்கு முன்; வம்மின் வந்து கேளுங்கள்; பணிவார் வணங்குமவர்களின்; வினைகள் பாவங்களை; நாசம் அது அது அனைத்தையும்; செய்திடும் தொலைக்கும்; ஆதன்மையால் ஆகையால்; அதுவே அந்த பகவத்விஷயங்கள் தான்; நமது உய்விடம் நமது உய்விடம்; மனம் ஐந்தொடு மனம் ஐம்புலங்களில்; நைந்து நைந்து; உழல்வார் உழன்று வருந்துவதால்; மதி இல் புத்தி கெட்டவர்களாயிருக்கும்; நீசர் அவர் அற்ப மனிதர்கள்; சென்று சென்று; அடையாத அடைய முடியாத; அவனுக்கு எம்பெருமானுக்கு; இடமானதும் இடம்; நாள் அப்போதலர்ந்த; மலர்மேல் பூவின் மேலே படிந்த; வாசம் பரிமளத்தை; அணி வண்டு ஏற்றுக் கொண்ட வண்டுகள்; உறை ரீங்காரம் செய்கின்ற; பைம் பரந்த; புறவின் சோலைகளை யுடைய; இடம் இருப்பிடமாவது; மா மலை ஆவது மா மலையான; நீர்மலையே நீர்மலையே
idhu the greatness of this bhagavath vishayam; pĕsum al̤avu anṛu cannot be fully spoken of by us; namar ŏh our people! (this best principle); piṛar atheists; kĕtpadhan mun before hearing; vammin come;; adhu that bhagavath vishayam; paṇivār those who worship, their; vinaigal̤ sins; nāsam seydhidum will destroy;; ādhanmaiyāl thus; adhuvĕ that bhagavath vishayam alone; namadhu our; uyvu idam the abode of uplifting;; manam heart; aindhodu going towards ṣabdha (sound), sparṣa (touch), rūpa (form), rasa (taste) and gandha (smell); naindhu being weakened; uzhalvār being those who suffer; madhiyil ignorant; nīsaravar for lowly persons; senṛu adaiyādhavanukku one who is difficult to reach; idamāvadhu the abode; nāl̤ freshly blossomed; malarmĕl due to being spread on flower; vāsam fragrant; aṇi beautiful; vaṇdu beetles; aṛai humming; pai vast; puṛavil having surroundings; mā malaiyāna nīr malai the best hill, thirunīrmalai.

Āchārya Vyākyānam

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல் வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில் நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9-

பிறர்-நாஸ்திகர் அதுவே-அந்த பகவத் விஷயமே -பேசுமளவன்றிது மதியில்-மதி இல்லாமல் நாண் மலர்-அப்போது அலர்ந்த மலர்

———————————————————

வியாக்யானம்

+ Read more