PT 2.4.3

சக்கரத்தால் சூரியனை மறைத்தவன் இடம்

1080 அலமன்னுமடல்சுரிசங்கமெடுத்து
அடலாழியினால் அணியாருருவின் *
புலமன்னுவடம்புனை கொங்கையினாள்
பொறைதீரமுனாள்அடுவாளமரில் *
பலமன்னர்படச்சுடராழியினைப்
பகலோன்மறையப் பணிகொண்டு * அணிசேர்
நிலமன்னனுமாய் உலகாண்டவனுக்குஇடம்
மாமலையாவதுநீர்மலையே.
PT.2.4.3
1080 alam maṉṉum aṭal curi caṅkam ĕṭuttu * aṭal āzhiyiṉāl aṇi ār uruviṉ *
pulam maṉṉum vaṭam puṉai kŏṅkaiyiṉāl̤ * pŏṟai tīra muṉ āl̤ aṭu vāl̤ amaril **
pala maṉṉar paṭac cuṭar āzhiyiṉaip * pakaloṉ maṟaiyap paṇikŏṇṭu aṇicer *
nila maṉṉaṉum āy ulaku āṇṭavaṉukku iṭam * mā malai āvatu-nīrmalaiye-3

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1080. Our god, the ruler of the world carries a curving conch and a mighty discus that destroys his enemies fought in the Bhārathā war with the Kauravās, throwing his shining discus and hiding the sun, the god of the day, and causing the Pāndavās to win the war, taking away the suffering of Draupadi ornamented with beautiful jewels. He stays in the beautiful Thiruneermalai hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அணி ஆர் உருவின் அழகிய சரீரத்திலே; அடல் ஆழியினால் சிறந்த சக்கரத்தோடு; அலம் கலப்பையையும்; மன்னும் அடல் எதிரிகள் பயப்படும்; சுரி சங்கம் பாஞ்சஜந்யத்தையும்; எடுத்து முன் வைத்துக்கொண்டு முன்பு; புலம் மன்னும் அழகியதான; வடம் புனை முத்தாரமணிந்த; கொங்கையினாள் பூமாதேவியின்; பொறை தீர பாரத்தைப் போக்குவதற்கு; ஆள் அடு மனிதர்களைமுடிக்கும்; வாள் அமரில் ஒளியுள்ள யுத்தத்திலே; பல மன்னர் பட பல அரசர்கள் அழியும்படி; சுடர் ஆழியினை ஒளிமிக்க சக்கரத்தை; பகலோன் மறைய ஸூர்யன் மறையும்படி; பணிகொண்டு பிரயோகம் செய்து; அணி சேர் நில அழகிய இந்நிலத்திற்கு; மன்னனும் ஆய் அரசனாயும்; உலகு உலகங்களை; ஆண்டவனுக்கு ரக்ஷிப்பவனுமான பெருமானுக்கு; இடம் இருப்பிடமாவது; மா மலை ஆவது மா மலையான; நீர்மலையே நீர்மலையே
ār aṇi very beautiful; uruvil in the divine form; adal set to battle; āzhiyināl with the thiruvāzhi (divine disc); alam plough; mannum being fixated; adal set to battle; suri having curved lines; sangam ṣrī pānchajanyam (divine conch); eduththu held; mun when dhuryŏdhana et al remained unfavourable; pulam (sarvĕṣvaran-s) senses such as eyes; mannu to remain attached at all times; vadam by ornaments such as necklace; punai decorated; kongaiyināl̤ ṣrī bhūmip pirātti who is having [such] bosom, her; poṛai burden; thīra to eliminate; āl̤ adu which can destroy men; vāl̤ shining; amaril in mahābhāratha battle; pala mannar many kings; pada to be destroyed; sudar very radiant; āzhiyinai thiruvāzhi; pagalŏn sun; maṛaiya to hide; paṇi koṇdu engaged in service; aṇi sĕr beautiful; nila mannanumāy being the king of earth; ulagu āṇdavanukku one who ruled the world; idam āvadhu the abode; best; malai hill; nīr malai thirunīrmalai