PT 2.1.7

வேங்கடத்தே நிற்பவனைச் சரணடை

1054 தருக்கினால்சமண்செய்து சோறுதண்தயிரினால்திரளை * மிடற்றிடை
நெருக்குவார்அலக்கணதுகண்டு என்நெஞ்சமென்பாய்! *
மருட்கள்வண்டுகள்பாடும் வேங்கடம்கோயில் கொண்டதனோடும் * வானிடை
அருக்கன்மேவிநிற்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.
PT.2.1.7
1054 tarukkiṉāl camaṇ cĕytu * coṟu taṇ tayiriṉāl tiral̤ai * miṭaṟṟiṭai
nĕrukkuvār alakkaṇ * atu kaṇṭu ĕṉ nĕñcam ĕṉpāy *
marul̤kal̤ vaṇṭukal̤ pāṭum * veṅkaṭam koyil kŏṇṭu ataṉoṭum * vāṉiṭai
arukkaṉ mevi niṟpāṟku * aṭimait tŏzhil pūṇṭāye-7

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1054. The Jain monks argue endlessly with empty debates about their faith and then stuff balls of rice mixed with cold curd into their throats. Seeing all this, O mind, you stayed away from their path! Instead, you have chosen to serve the Lord who made Tirumalai, where beetles hum sweet tunes, His temple. The same Lord who also resides gloriously in the solar realm and beyond the skies in SriVaikuntam, as the Antaratma for all!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தருக்கினால் வீண் தர்க்கங்களாலே தங்களுடைய; சமண் சமண மதத்தைப்பற்றி; செய்து வாதம் செய்துகொண்டு; தண் தயிரினால் குளிர்ந்த தயிரோடு கூடிய; சோறு திரளை சோற்றுக் கவளத்தை; மிடற்றிடை தொண்டையிலிட்டு; நெருக்குவார் அடைப்பவர்களின்; அலக்கண் அப்படிப்பட்ட; அது கண்டு திண்டாட்டத்தை பார்த்து; என் நெஞ்சம் ஓ மனமே!; என்பாய்! நீ (அவர்கள் கூட்டத்தில் சேராமல்); வண்டுகள் வண்டுகள்; மருள்கள் மருள்கள் என்னும் இசையை; பாடும் வேங்கடம் பாடும் வேங்கடத்தில்; கோயில் கோயில்; கொண்டு கொண்டுள்ள எம்பெருமானுக்கு; அதனோடும் வானிடை மேலும் ஆகாசத்திலே; அருக்கன் மேவி ஸூர்யமண்டலத்திலிருக்கும்; நிற்பார்க்கு எம்பெருமானுக்கு; அடிமை கைங்கர்யம் பண்ணுவதை; தொழில் பூண்டாயே ஏற்றுக் கொண்டாயே
tharukkināl By useless debate; samaṇ their kshapaṇa (jaina) philosophy; seydhu established; thaṇ best; thayirināl mixed with curd; sŏṝuth thiral̤ai handful of rice; midaṝidai in their throat; nerukkuvār will push and suffer (to have their eyes pop out); adhu alakkaṇ that sorrow; kaṇdu saw; en nenjam enbāy ŏh you who are known as -my heart-!; vaṇdugal̤ beetles; marul̤gal̤ tunes such as marul̤; pādum singing; vĕngadam thirumalā; kŏyil koṇdu having as abode; adhanŏdum along with that; vānidai roaming in the sky; arukkan for sun; mĕvi niṛpāṛku sarvĕṣvaran who is the antharāthmā; adimaith thozhil pūṇdāyĕ ẏou are engaged in serving him!