PT 2.1.10

இப்பாடல்களைப் பாடுவோர் தேவர் ஆவர்

1057 மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கடமலை கோயில்மேவிய *
அன்னமாய்நிகழ்ந்த அமரர்பெருமானை *
கன்னிமாமதிள்மங்கையர்கலிகன்றி இந்தமிழாலுரைத்த * இம்
மன்னுபாடல்வல்லார்க்கு இடமாகும்வானுலகே. (2)
PT.2.1.10
1057 ## miṉṉu mā mukil mevu * taṇ tiru veṅkaṭa malai koyil meviya *
aṉṉam āy nikazhnta * amarar pĕrumāṉai **
kaṉṉi mā matil̤ maṅkaiyar kali kaṉṟi * iṉ tamizhāl uraitta * im
maṉṉu pāṭal vallārkku * iṭam ākum vāṉ ulake-10

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1057. In the cool Tirumalai, where bright lightning flashes and heavy clouds gather, dwells the Lord who once took the form of a swan, the great master of the Nityasūrīs. Kaliyan, who shattered the strongholds of sin, sang of Him in sweet Tamil from the fortified town of Thirumangai. Those who can recite these enduring verses will surely find their place in the eternal SriVaikuntam!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னு மின்னும்; மா முகில் மேவு காளமேகங்கள் வரும்; தண் திருவேங்கட மலை திருமலையில்; கோயில் மேவிய கோயில் கொண்டுள்ள; அன்னம் ஆய் அன்னமாக; நிகழ்ந்த அவதரித்தவனும்; அமரர் நித்யசூரிகளுக்கு; பெருமானை தலைவனுமானவனைக் குறித்து; கன்னி மா மதிள் பெரிய மதில்களையுடைய; மங்கையர் திருமங்கையிலிருக்கும்; கலி கன்றி திருமங்கை ஆழ்வார்; இன் தமிழால் இனிய தமிழ் மொழியில்; உரைத்த அருளிச்செய்த; இம் மன்னு பாடல் பாசுரங்களை பாட; வல்லார்க்கு வல்லவர்களுக்கு; வான் உலகே பரமபதம்; இடம் ஆகும் இருப்பிடம் ஆகும்
minnum with lightning; māmugil huge clouds; mĕvu arriving and gathering; thaṇ cool; thiruvĕngada malai thirumalā; kŏyil having as temple; mĕviya one who is eternally residing; annamāy in the form of a swan; nigazhndha one who divinely incarnated; perumānai on the controller; kanni made of rock; huge; madhil̤ having fort; mangaiyar for the residents of thirumangai region; kali sins; kanṛi āzhvār who eliminated; in sweet for the ear; thamizhālĕ in thamizh; uraiththa mercifully spoken; mannu firmly remaining (in the divine heart of emperumān); ippādal this decad; vallārkku for those who practice; vān ulagu paramapadham; idam āgum will be the abode.