PT 11.7.9

கண்ணனுக்கு அடிமைப்படாதவர் மானிடர் அல்லர்

2020 தேனோடுவண்டாலும் திருமாலிருஞ்சோலை *
தானிடமாக்கொண்டான் தடமலர்க்கண்ணிக்காய் *
ஆன்விடையேழன்றடர்த்தாற்கு ஆளானாரல்லாதார் *
மானிடவரல்லரென்று என்மனத்தேவைத்தேனே. (2)
2020 teṉŏṭu vaṇṭu ālum * tirumāliruñcolai *
tāṉ iṭamāk kŏṇṭāṉ * taṭa malark kaṇṇikkāy **
āṉ viṭai ezh aṉṟu aṭarttāṟku- * āl̤ āṉār allātār *
māṉiṭavar allar ĕṉṟu * ĕṉ maṉatte vaitteṉe

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2020. The god of Thirumālirunjolai where bees drink honey and sing fought with seven bulls to marry Nappinnai whose eyes are as large and beautiful as flowers. If devotees do not become his slaves they are not real people. I am sure of that in my mind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேனோடு தேன் பருகும்; வண்டு வண்டுகள்; ஆலும் ஆரவாரிக்கும்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை மலையை; தான் இடமா தனக்கு இருப்பிடமாக; கொண்டான் அமைத்துக் கொண்ட பெருமானும்; அன்று முன்பொருசமயம்; தட மலர் விசாலமாய் கருநெய்தல் பூ போன்ற; கண்ணிக்காய் கண்களையுடைய நப்பின்னைக்காக; ஆன் விடை ஏழ் ஏழு ரிஷபங்களை; அடர்த்தாற்கு அடக்கின பெருமானுக்கு; ஆள் ஆனார் அல்லாதார் அடிமைப் படாதவர்கள்; மானிடவர் அல்லர் மனிதர்கள் அல்லர்; என்று என் மனத்தே என்று என் மனதில்; வைத்தேனே உறுதியாக நினைக்கிறேன்