PT 11.7.8

கண்ணனைக் கருதாதார் விவேகம் இல்லாதவர்

2019 வெறியார்கருங்கூந்தல் ஆய்ச்சியர்வைத்த *
உறியார்நறுவெண்ணெய் தானுகந்துஉண்ட
சிறியானை * செங்கணெடியானைச் சிந்தித்து
அறியாதார் * என்றும் அறியாதார்கண்டாமே.
2019 vĕṟi ār karuṅ kūntal * āycciyar vaitta *
uṟi ār naṟu vĕṇṇĕy * tāṉ ukantu uṇṭa
ciṟiyāṉai ** cĕṅ kaṇ nĕṭiyāṉaic- * cintittu
aṟiyātār * ĕṉṟum aṟiyātār kaṇṭāme

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2019. When he was a little child he stole and happily ate the fragrant butter that was kept in the uri by the cowherdesses with dark fragrant hair. If devotees do not think of the tall god whose eyes are beautiful and know him, they will never know him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெறி ஆர் மிக்க மணமுள்ள; கருங் கூந்தல் கரிய கூந்தலையுடைய; ஆய்ச்சியர் ஆய்ச்சியர்; வைத்த சேமித்து வைத்த; உறி ஆர் உறிகளிலே நிறைந்துள்ள; நறு வெண்ணெய் மணமுள்ள வெண்ணெயை; தான் உகந்து உண்ட தான் உகந்து உண்ட; சிறியானை குழந்தை கண்ணனை; செங் கண் சிவந்த கண்களையுடைய; நெடியானை மேன்மையான எம்பெருமானை; சிந்தித்து சிந்தித்தும் மனத்தாலும்; அறியாதார் நினைக்காதவர்கள்; என்றும் என்றும் அவனை; அறியாதார் அறிய மாட்டார்கள்; கண்டாமே இதை நாம் நன்கு அறிவோம்