PT 11.7.10

பாவம் நீங்கப் பரமனடி சூடுங்கள்

2021 மெய்ந்நின்ற பாவம்அகல * திருமாலைக்
கைந்நின்றஆழியான் சூழும்கழல்சூடி *
கைந்நின்றவேற்கைக் கலியனொலிமாலை *
ஐயொன்றுமைந்தும் இவைபாடியாடுமினே. (2)
2021 ## mĕyn niṉṟa * pāvam akala * tirumālaik
kain niṉṟa āzhiyāṉ * cūzhum kazhal cūṭi **
kain niṉṟa vel kaik * kaliyaṉ ŏli mālai *
aiyŏṉṟum aintum * ivai-pāṭi āṭumiṉe

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2021. Kaliyan who carries a spear in his hands composed ten musical pāsurams worshiping the feet of the lord who carries a discus. If devotees sing these pāsurams and dance all the results of their bad karmā will go away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெய்ந் நின்ற உலகில் அநுபவிக்க வேண்டிய; பாவம் அகல பாவங்கள் நீங்க; ஆழியான் சக்கரம் கையிலுடைய; திருமாலை திருமாலின்; சூழும் ஸர்வ வியாபியான; கழல் திருவடிகளை; சூடி முடி மேற்கொள்ளும்; கைந் நின்ற ஆழ்வாருக்கு உதவ எப்போதும்; வேல் கைந் நின்ற வேல் கையிலுடைய; கலியன் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த; ஒலி மாலை சொல் மாலையான பாசுரங்கள்; ஐயொன்றும் ஐந்தும் பத்தையும்; இவை பாடி வாயாரப் பாடி; ஆடுமினே ஆடுங்கள்