PT 11.6.9

பிரளயத்திலிருந்து நம்மைக் காத்தவன் மணிவண்ணன்

2010 அண்டத்தின்முகடழுந்த
அலைமுந்நீர்த்திரைததும்ப ஆ! ஆ! வென்று *
தொண்டர்க்கும்அமரர்க்கும்
முனிவர்க்கும்தானருளி * உலகமேழும்
உண்டொத்ததிருவயிற்றின்
அகம்படியில்வைத்துஉம்மைஉய்யக்கொண்ட *
கொண்டற்கைமணிவண்ணன்
தண்குடந்தைநகர்ப்பாடியாடீர்களே.
2010 aṇṭattiṉ mukaṭu azhunta * alai munnīrt
tirai tatumpa āā ĕṉṟu *
tŏṇṭarkkum amararkkum * muṉivarkkum
tāṉ arul̤i ** ulakam ezhum
uṇṭu ŏtta tiruvayiṟṟiṉ * akampaṭiyil
vaittu ummai uyyakkŏṇṭa *
kŏṇṭal kai maṇi vaṇṇaṉ * taṇ
kuṭantai nakar pāṭi āṭīrkal̤e

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2010. At the end of the eon when the waves of the ocean rose and touched the sky, he felt pity for his devotees, the gods and the sages, gave them his grace and swallowed all the seven worlds and kept them in his divine stomach. O devotees, sing, dance and praise the dark jewel-colored god of cool Kudandai who protected you in his stomach.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டத்தின் அண்டப்பித்தின்; முகடு அழுந்த சிகரம் உள்ளே அழுந்த; அலை முந்நீர் அலையையுடைய கடலின்; திரை ததும்ப அலை ததும்ப; ஆ ஆ! என்று ஆ ஆ! என்று பக்தி பண்ணிய; தொண்டர்க்கும் தொண்டர்க்கும்; அமரர்க்கும் தேவர்களுக்கும்; முனிவர்க்கும் முனிவர்களுக்கும்; தான் அருளி தானே அருள் செய்து; உலகம் ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டு ஒத்த உண்டு முன் போலவே; திருவயிற்றின் திருவயிற்றின்; அகம்படியில் உட்புறத்திலே; வைத்து வைத்து; உம்மை உங்களை; உய்யக்கொண்ட காப்பாற்றிய; கொண்டற்கை மேகம்போல் உதாரனாய்; மணி நீலமணி நிறம் போன்ற; வண்ணன் பெருமானின்; தண் குளிர்ந்த; குடந்தை நகர் திருக்குடந்தையை; பாடி ஆடீர்களே வாயாரப் பாடி ஆடுங்கள்