PT 11.6.7

கண்ணனை எண்ணாத மனிதரை மதியாதே

2008 மண்ணாடும்விண்ணாடும்
வானவரும்தானவரும்மற்றுமெல்லாம் *
உண்ணாதபெருவெள்ளம்
உண்ணாமல்தான்விழுங்கிஉய்யக்கொண்ட *
கண்ணாளன்கண்ணமங்கைநகராளன்
கழல்சூடி * அவனைஉள்ளத்து
எண்ணாதமானிடத்தை
எண்ணாதபோதெல்லாம் இனியவாறே.
2008 maṇ nāṭum viṇ nāṭum * vāṉavarum
tāṉavarum maṟṟum ĕllām *
uṇṇāta pĕru vĕl̤l̤am * uṇṇāmal
tāṉ vizhuṅki uyyakkŏṇṭa **
kaṇṇāl̤aṉ kaṇṇamaṅkai nakarāl̤aṉ *
kazhal cūṭi avaṉai ul̤l̤attu *
ĕṇṇāta māṉiṭattai * ĕṇṇāta
potu ĕllām iṉiya āṟe

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2008. He is our dear lord of Thirukannamangai who protected all, swallowing all the people of the worlds, the gods in the sky, the Danavas and all others so that the huge flood that came at the end of the eon did not swallow them. Any time his devotees do not think of those who fail to worship his ankleted feet is sweet for them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண் நாடும் பூலோகமும்; விண் நாடும் சுவர்க்கமும்; வானவரும் தேவர்களும்; தானவரும் அசுரர்களும்; மற்றும் மற்றுமுள்ள; எல்லாம் பொருள்களுமெல்லாம்; உண்ணாத கூடிமுயன்றாலும்; பெரு வெள்ளம் பெரு வெள்ளம்; உண்ணாமல் உலகத்தை விழுங்காதபடி; தான் விழுங்கி தான் விழுங்கி; உய்யக்கொண்ட காப்பாற்றினவனான; கண்ணாளன் கண்ணன்; கண்ணமங்கை திருக்கண்ணமங்கையில்; நகராளன் இருப்பவனின்; கழல் சூடி திருவடிகளை தலை மீது சூடி; அவனை அப்பெருமானை; உள்ளத்து உள்ளத்தில்; எண்ணாத சிந்திக்காத; மானிடத்தை மனிதர்களை; எண்ணாத நினைக்காத மறந்த; போது எல்லாம் போது எல்லாம்; இனிய ஆறே இனிய போதாகும்