PT 11.6.5

பகவானின் ஸஹஸ்ர நாமங்களைச் சொல்லுங்கள்

2006 பாராரும்காணாமே
பரவைமாநெடுங்கடலேயானகாலம் *
ஆரானும்அவனுடையதிருவயிற்றில்
நெடுங்காலம்கிடந்தது * உள்ளத்
தோராதவுணர்விலீர்! உணருதிரேல்,
உலகளந்தஉம்பர்கோமான் *
பேராளன்பேரான
பேர்களாயிரங்களுமேபேசீர்களே.
2006 pār ārum kāṇāme * paravai mā
nĕṭuṅ kaṭale āṉa kālam *
ārāṉum avaṉuṭaiya tiru vayiṟṟil *
nĕṭuṅkālam kiṭantatu ** ul̤l̤attu
orāta uṇarvilīr uṇarutirel *
ulaku al̤anta umpar komāṉ *
perāl̤aṉ perāṉa * perkal̤
āyiraṅkal̤ume pecīrkal̤e-5

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2006. At the end of the eon, the whole world was filled with water and no one was going to survive. He swallowed everyone and kept them in his divine stomach for a long time. O devotees, you do not understand that. If you understood his power, you would praise the thousand names of the generous king of the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் ஆரும் பூமியை ஒருவராலும்; காணாமே காணமுடியாதபடி; நெடுங் கடலே நெடுங் கடலே; பரவை மா மகா பிரளயம்; ஆன காலம் கொண்ட காலத்தில்; ஆரானும் எவரும்; அவனுடைய அந்த எம்பெருமானின்; திரு வயிற்றில் திரு வயிற்றில்; நெடுங்காலம் நெடுங்காலம்; கிடந்தது கிடந்தது பற்றி; உள்ளத்து உள்ளத்தில்; ஓராத உணர்விலீர்! சிந்திக்காத மூடர்களே; உணருதிரேல் சிந்தித்திருப்பீர்களாகில்; உலகு அளந்த உலகம் அளந்த; உம்பர் நித்யஸூரிகளின்; கோமான் தலைவனான; பேராளன் எம்பெருமானின்; பேரான பேர்கள் நாமங்களான; ஆயிரங்களுமே ஸஹஸ்ரநாமங்களையுமே; பேசீர்கள பேசுங்கள்