PT 11.6.4

நம்மை உய்யக் கொண்ட தலைவன் கண்ணனே

2005 பனிப்பரவைத்திரைததும்பப்
பாரெல்லாம்நெடுங்கடலேயானகாலம் *
இனிக்களைகணிவர்க்கில்லையென்று
உலகமேழினையும்ஊழில்வாங்கி *
முனித்தலைவன், முழங்கொளிசேர்திருவயிற்றில் வைத்து
உம்மையுய்யக்கொண்ட *
கனிகளவத்திருவுருவத்தொருவனையே
கழல்தொழுமாகல்லீர்களே.
2005 paṉip paravait tirai tatumpap * pār ĕllām
nĕṭuṅ kaṭale āṉa kālam *
iṉik kal̤aikaṇ ivarkku illai ĕṉṟu * ulakam
ezhiṉaiyum ūzhil vāṅki **
muṉit talaivaṉ muzhaṅku ŏl̤i cer * tiru vayiṟṟil
vaittu ummai uyyakkŏṇṭa *
kaṉik kal̤avat tiru uruvattu ŏruvaṉaiye *
kazhal tŏzhumā kallīrkal̤e-4

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2005. At the end of the eon, the waves of the ocean spread everywhere in the world and the whole earth became a large ocean. He thought that all the seven worlds would be destroyed and he swallowed them all and kept them in his divine stomach, making it very large. He protected you all. He has a dark form like a ripe kalavam fruit. O devotees, why don’t you learn to worship only our unique god’s feet?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் எல்லாம் பூமி எங்கும்; பனிப் பரவை குளிர்ந்து பரந்திருக்கிற; திரை ததும்ப அலைகள் ததும்ப; நெடுங் கடலே மகா பிரளய வெள்ளம்; ஆன காலம் வியாபித்த போது; இவர்க்கு இனிக் இனி உலகத்திலுள்ளோர்களை; களை கண் காப்பவர் யாரும்; இல்லை என்று இல்லை என்று திருமால்; உலகம் ஏழினையும் ஏழு லோகங்களையும்; ஊழில் வாங்கி முறையாக வாங்கி; முழங்கு முழங்குவதாயும்; ஒளி சேர் ஒளியுள்ளதுமான; திரு வயிற்றில் தன் திரு வயிற்றில்; வைத்து வைத்து; உம்மை உங்களை; உய்யக்கொண்ட காபாற்றிய; முனித் தலைவன் முனிவர்களின் தலைவன்; கனிக் களவ கனிந்த களாப்பழம் போன்ற; ஒருவனையே ஒப்பற்ற ஒருவனின்; கழல் தொழுமா திருவடிகளைத் தொழுவதையே; கல்லீர்களே கற்கமாட்டீர்களோ?