PT 11.6.10

திருமகளின் அருள் பெறுவர்

2011 தேவரையும்அசுரரையும்
திசைகளையும்கடல்களையும்மற்றும்முற்றும் *
யாவரையும்ஒழியாமே
எம்பெருமானுண்டுமிழ்ந்ததறிந்துசொன்ன *
காவளரும்பொழில்மங்கைக்
கலிகன்றியொலிமாலைகற்றுவல்லார் *
பூவளரும்திருமகளால்அருள்பெற்றுப்
பொன்னுலகிற்பொலிவர்தாமே (2)
2011 ## tevaraiyum acuraraiyum * ticaikal̤aiyum
kaṭalkal̤aiyum maṟṟum muṟṟum *
yāvaraiyum ŏzhiyāme * ĕm pĕrumāṉ
uṇṭu umizhntatu aṟintu cŏṉṉa **
kā val̤arum pŏzhil maṅkaik * kalikaṉṟi
ŏli mālai kaṟṟu vallār *
pū val̤arum tirumakal̤āl arul̤pĕṟṟup *
pŏṉ-ulakil pŏlivar-tāme

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2011. Kaliyan of Thirumangai surrounded by flourishing groves composed a garland of musical pāsurams describing how the lord swallowed all the oceans, the directions, the Asuras, the gods in the sky and all the worlds and how he left no one and nothing without his protection. If devotees learn these pāsurams well and recite them, they will go to the golden world of the gods, receive the grace of Lakshmi on the lotus, and shine.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேவரையும் தேவர்களையும்; அசுரரையும் அசுரர்களையும்; திசைகளையும் திசைகளையும்; கடல்களையும் கடல்களையும்; மற்றும் முற்றும் மற்றும் அனைத்தையும்; யாவரையும் யாவரையும்; ஒழியாமே ஒன்று விடாமல்; எம் பெருமான் எம்பெருமான்; உண்டு உமிழ்ந்தது உண்டு உமிழ்ந்தது; அறிந்து உள்ளபடி அறிந்து; சொன்ன அருளிச்செய்த; கா வளரும் பூந்தோட்டங்கள் வளரப்பெற்ற; பொழில் சோலைகளை யுடைய; மங்கை கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த சொல் மாலையான; கற்று இப்பாசுரங்களை கற்று ஓத; வல்லார் வல்லவர்கள்; பூ வளரும் தாமரைப்பூவில் வளரும்; திரு மகளால் திரு மகளால்; அருள் பெற்று அருள் பெற்று; பொன் உலகில் பரமபதத்தில்; பொலிவர் தாமே விளங்கப்பெறுவர்கள்