PT 11.4.3

வராகமாகிய பெருமானே நம்மை யாளும் அரசு

1984 தீதறுதிங்கள்பொங்குசுடரும்பரும்பர்
உலகேழினோடும்உடனே *
மாதிரமண்சுமந்தவடகுன்றும் நின்ற
மலையாறும்ஏழுகடலும் *
பாதமர்சூழ்குளம்பினகமண்டலத்தின்
ஒருபாலொடுங்க, வளர்சேர் *
ஆதிமுன்ஏனமாகிஅரணாயமூர்த்தி
யது நம்மையாளுமரசே.
1984 tītu aṟu tiṅkal̤ pŏṅku cuṭar umpar *
umpar-ulaku ezhiṉoṭum uṭaṉe *
mātiram maṇ cumanta vaṭa kuṉṟum niṉṟa *
malai āṟum ezhu kaṭalum **
pātamar cūzh kul̤ampiṉ aka maṇṭalattiṉ *
ŏrupāl ŏṭuṅka val̤ar cer *
āti muṉ eṉam āki araṇ āya mūrtti *
atu nammai āl̤um arace-3

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1984. He is the ancient god who, at the end of the eon, became a boar and saved everything from the flood— the worlds of the gods and all the seven worlds where the faultless moon and the sun shine, and all mountains and rivers of the earth, and the seven oceans. Containing all the worlds and the oceans in the vessel that he carried on his foot, he protected us. He is our ruler.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீது அறு குற்றமற்ற; திங்கள் சந்திரனும்; பொங்கு சுடர் தஹிக்கும் சூரியனும்; உம்பர் தேவர்களும்; உம்பர் உலகு தேவலோகம்; ஏழினோடும் உடனே ஏழினோடும்; மாதிரம் திசைகளும்; மண் சுமந்து பூமியைத் தாங்கும்; வட குன்றும் மேரு பர்வதமும்; நின்ற மலை ஆறும் மற்ற மலைகள் ஆறும்; ஏழு கடலும் ஏழு கடலும் இவை அனைத்தும்; பாதம் அமர் திருவடிகளிலே வராஹத்தின்; சூழ் குளம்பின் பரப்பிய குளம்பின்; அக மண்டலத்தின் அகண்ட வலயத்தினுள்; ஒரு பால் ஒடுங்க அடங்கும்படி; வளர் வளரத் தகுந்த; சேர் ஆதி காரணபூதனானவன்; முன் ஏனம் ஆகி முன்பு மகா வராகமாய்; அரண் ஆய ரக்ஷகனாய் நின்ற; மூர்த்தி அது நம்மை அந்த மூர்த்தி நம்மை; ஆளும் அரசே அடிமை கொண்டு காப்பான்