PT 11.2.8

சூரியன் உதிக்காமல் எங்கே சென்று விட்டது?

1969 மஞ்சுறுமாலிருஞ்சோலை நின்றமணாளனார் *
நெஞ்சம்நிறைகொண்டுபோயினார் நினைகின்றிலர் *
வெஞ்சுடர்போய்விடியாமல் எவ்விடம்புக்கதோ! *
நஞ்சுஉடலம்துயின்றால் நமக்குஇனிநல்லதே.
1969 mañcu uṟu māliruñcolai * niṉṟa maṇāl̤aṉār *
nĕñcam niṟaikŏṇṭu poyiṉār * niṉaikiṉṟilar **
vĕm cuṭar poy viṭiyāmal * ĕvviṭam pukkato? *
nañcu uṭalam tuyiṉṟāl * namakku iṉi nallate

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1969. She says, “The beloved god of Thirumālirunjolai where the clouds float high took my chastity and my heart and went away. He hasn’t thought of me at all after that. It is dawn yet? Where does the hot sun go and hide? Wouldn’t it be better if my suffering body could sleep?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மஞ்சு உறு மேகத்தளவு ஓங்கின; மாலிருஞ்சோலை திருமாலிருஞ் சோலைமலையிலே; நின்ற இருக்கும்; மணாளனார் எம்பெருமான்; நெஞ்சம் என் மனத்தின்; நிறைகொண்டு பெண்மையைக் கொண்டு; போயினார் போய் விட்டான் இதைப்பற்றி ஒருபோதும்; நினைகின்றிலர் நினைப்பதில்லை மறந்துவிட்டான்; வெம் சுடர் போய் ஸூர்யனானவன்; விடியாமல் உதிக்காமல்; எவ்விடம் எவ்விடம் போய்; புக்கதோ ஒளிந்தானோ; இனி உடலம் என் உடல் இனி; நஞ்சு நைந்து போய்; துயின்றால் முடிவு பெற்றால்; நமக்கு நல்லதே அதுவே நல்லது