PT 11.2.6

இரவு நீட்டிக்கின்றதே! என் செய்வேன்

1967 ஆழியும்சங்குமுடைய நங்களடிகள்தாம் *
பாழிமையானகனவில் நம்மைப்பகர்வித்தார் *
தோழியும்நானும்ஒழிய வையம்துயின்றது *
கோழியும்கூகின்றதில்லைக் கூரிருளாயிற்றே!
1967 āzhiyum caṅkum uṭaiya * naṅkal̤ aṭikal̤-tām *
pāzhimaiyāṉa kaṉavil * nammaip pakarvittār **
tozhiyum nāṉum ŏzhiya * vaiyam tuyiṉṟatu *
kozhiyum kūkiṉṟatu illaik * kūr irul̤ āyiṟṟe

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1967. She says, “The lord who carries a discus and a conch came to me in a dream and made me love him. Except me and my friend, the whole world is sleeping. The rooster has not crowed yet and it is very dark. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழியும் சக்கரமும்; சங்கும் உடைய சங்கும் உடையவரான; நங்கள் அடிகள் தாம் நம் எம்பெருமான்; பாழிமையான மிகப் பெரிய; கனவில் நம்மை கனவில் கலந்த என்னை; பகர் வித்தார் கூப்பிட்டார்; தோழியும் நானும் தோழியும் நானும்; ஒழிய வையம் தவிர அனைத்து உலகும்; துயின்றது உறங்கியது; கோழியும் கோழியும்; கூ கின்றது இல்லை கூவவில்லை; கூர் இருள் நள்ளிருள் ஆயிற்றே; ஆயிற்றே? என் செய்வது?