PT 11.2.4

வாடைக்காற்று வருகிறதே! என் செய்வேன்?

1965 பொருந்து மாமரம் ஏழும்எய்தபுனிதனார் *
திருந்துசேவடி என்மனத்துநினைதொறும் *
கருந்தண்மாகடல் கங்குலார்க்கும், அதுவன்றியும் *
வருந்தவாடைவரும் இதற்கினிஎன்செய்கேன்?
1965 pŏruntu mā maram * ezhum ĕyta puṉitaṉār *
tiruntu cevaṭi * ĕṉ maṉattu niṉaitŏṟum **
karun taṇ mā kaṭal * kaṅkul ārkkum atu aṉṟiyum *
varunta vāṭai varum * itaṟku iṉi ĕṉ cĕykeṉ?

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1965. She says, “The faultless lord shot his arrows and destroyed the seven marā trees. Whenever I think of his divine feet, the sound of the cool dark ocean that roars all night and the cold wind that blows make me suffer. What can I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருந்து பொருந்தி நிற்கும்; மா மரம் பெரிய மராமரங்கள்; ஏழும் எய்த ஏழையும் முறித்தெறிந்த; புனிதனார் புனிதனான பெருமானின்; திரு உந்து ஐச்வர்ய ப்ரகாசமான; சேவடி திருவடிகளை; என் மனத்து என் மனது; நினைதொறும் நினைக்கும் போதெல்லாம்; கருந் தண் கருத்த குளிர்ந்த; மா கடல் பெரிய கடல்; கங்குல் இரவு முழுதும்; ஆர்க்கும் ஆரவாரிக்கும்; அது அன்றியும் அது அன்றியும்; வாடை வாடைக் காற்றும்; வருந்த என்னைத் துன்புறுத்த; வரும் வருகின்றது; இதற்கு இதற்கு; இனி இனி நான்; என் செய்கேன்? என் செய்வேன்?