PT 11.2.10

வினைகள் நில்லா

1971 வென்றிவிடையுடன் ஏழடர்த்தஅடிகளை *
மன்றில்மலிபுகழ் மங்கைமன்கலிகன்றிசொல் *
ஒன்றுநின்றஒன்பதும் உரைப்பவர்தங்கள்மேல் *
என்றும்நில்லாவினை ஒன்றும்சொல்லில்உலகிலே. (2)
1971 ## vĕṉṟi viṭai uṭaṉ * ezh aṭartta aṭikal̤ai *
maṉṟil mali pukazh * maṅkai maṉ kalikaṉṟi cŏl **
ŏṉṟu niṉṟa ŏṉpatum * uraippavar-taṅkal̤mel *
ĕṉṟum nillā viṉai * ŏṉṟum cŏllil ulakile

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1971. Kaliyan, the chief of Thirumangai praised by all, composed ten pāsurams on the victorious lord who fought and killed the seven heroic bulls. If devotees learn and recite these pāsurams they will not experience the results of their karmā in this world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விடை ஏழ் உடன் ஏழு ரிஷபங்களையும்; அடர்த்த வென்றி அடக்கி வென்ற; அடிகளை பெருமானைக் குறித்து; மன்றில் நாற்சந்திகளிலே; மலி புகழ் நிறைந்த புகழையுடையவரும்; மங்கை மன் திருமங்கை மன்னனுமான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் அருளிச்செய்த; ஒன்று நின்ற ஒன்பதும் பத்து; உரைப்பவர் பாசுரங்களையும் ஓதுபவர்கள்; தங்கள்மேல் அருகில்; சொல்லில் அவர்கள் இருக்கும்; உலகிலே தேசத்திலும்; என்றும் ஒரு போதும்; வினை ஒன்றும் எந்த வித வினையும்; நில்லா வராது