PT 10.8.8

தேவியர் பலர் இருக்க, இப்படி வந்தீரே!

1929 புக்காடரவம் பிடித்தாட்டும்புனிதீர் *
இக்காலங்கள் யாம்உமக்குஏதொன்றுமல்லோம் *
தக்கார்பலர் தேவிமார்சாலவுடையீர் *
எக்கே! இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
1929 pukku āṭu aravam * piṭittu āṭṭum puṉitīr *
ik kālaṅkal̤ * yām umakku etŏṉṟum allom **
takkār palar * tevimār cāla uṭaiyīr *
ĕkke itu ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo?-8

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1929. A cowherd says to Kannan “You are faultless. You entered a pond, caught the snake Kālingan and danced on his heads. You don’t think we’re as important to you as you used to— you have many good girlfriends. O god! What is this? What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புக்கு பொய்கையில் புகுந்து; ஆடு படமெடுத்து ஆடும்; அரவம் பிடித்து காளீயனை பிடித்து; ஆட்டும் புனிதீர்! ஆட்டி அடக்கிய புனிதரே!; இக் காலங்கள் யாம் இப்போது நாங்கள்; உமக்கு ஏதொன்றும் உமக்கு ஒரு பொருட்டாக; அல்லோம் தோன்றுவதில்லை; தக்கார் உமக்குத் தகுந்த; பலர் தேவிமார் பல தேவிமார்களை; சால உடையீர் பட்டம் கட்டி வைத்துள்ளீர்; எக்கே! இது என்? இது என்ன கஷ்டம்; இது என்? என்ன கஷ்டம்? குறித்த காலத்தில் வராதது ஏன்?; இது என்னோ? இரவுப் பொழுதில் ஏன் வந்தீர்?