PT 10.8.5

புன்சிரிப்புடன் நின்றீர்! ஏன்?

1926 சுற்றும்குழல்தாழச் சுரிகையணைத்து *
மற்றும்பலமாமணி பொன்கொடணிந்து *
முற்றம்புகுந்து முறுவல்செய்துநின்றீர் *
எற்றுக்குஇதுவென்? இதுவென்? இதுவென்னோ?
1926 cuṟṟum kuzhal tāzhac * curikai aṇaittu *
maṟṟu pala * mā maṇi pŏṉ kŏṭu aṇintu **
muṟṟam pukuntu * muṟuval cĕytu niṉṟīr *
ĕṟṟukku? itu ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo?-5

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1926. A cowherd girl says to Kannan. “Your hair is long and curly, you carry a small sword and you are adorned with many golden ornaments studded with beautiful diamonds. You have come into our front yard and you smile and just stand there. Why do you do this? What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குழல் தலை முடியானது; சுற்றும் தாழ பிடரியைச் சுற்றிலும் தாழ; சுரிகை உடைவாளை; அணைத்து தரித்துக் கொண்டு; மற்றும் பல பொன் மேலும் பல பொன்னாலும்; மா மணி ரத்தினங்களாலுமான; கொடு ஆபரணங்கள்; அணிந்து அணிந்து கொண்டு; முற்றம் புகுந்து முற்றம் புகுந்து; முறுவல் செய்து முறுவல் செய்து கொண்டு; நின்றீர் எற்றுக்கு? நின்றீரே எதற்கு?; இது என்? தலை முடி தாழ வரவேண்டுமோ?; இது என்னோ? முறுவல் செய்து கொண்டு வரவேண்டுமோ?; இது என்? ஆயுதத்தோடே வரவேண்டுமோ?