PT 10.3.9

நாங்கள் களைப்புற்றோம்; எம்மைக் கொல்லாதீர்

1876 ஏடொத்தேந்தும்நீளிலைவேல் எங்களிராவணனார்
ஓடிப்போனார் * நாங்கள்எய்த்தோம் உய்வதோர்காரணத்தால் *
சூடிப்போந்தோம்உங்கள்கோமானாணை தொடரேன்மின் *
கூடிக்கூடிஆடுகின்றோம் குழமணிதூரமே.
1876 eṭu ŏttu entum nīl̤ ilai vel * ĕṅkal̤ irāvaṇaṉār
oṭippoṉār * nāṅkal̤ ĕyttom * uyvatu or kāraṇattāl **
cūṭip pontom uṅkal̤ komāṉ * āṇai tŏṭareṉmiṉ *
kūṭik kūṭi āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-9

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1876. “Our king Rāvana carried a long spear with a leaf-shaped blade and ran from the battlefield. We wanted to survive and have come to you. We will not fight with your king or with all of you. Together as a group we dance. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏடு ஒத்து பனை ஓலை போல் அகன்றதாயும்; நீள் நீண்டதாயும் இருக்கும்; இலை இலை போல் உள்ள; வேல் வேல்படையை; ஏந்தும் கையிலுடைய; எங்கள் இராவணனார் எங்கள் இராவணனார்; ஓடிப்போனார் முதுகுகாட்டி ஓடிப்போய் விட்டார்; நாங்கள் எய்த்தோம் நாங்களோ இளைத்தோம்; உய்வது ஓர் உய்வதற்கோர்; காரணத்தால் வழியில்லாமல்; உங்கள் கோமான் உங்கள் ராமனின்; ஆணை ஆணைக்கு; சூடிப் போந்தோம் பணிந்தோம்; தொடரேல்மின் எங்களைக் கொல்லாதீர்கள்; கூடி கூடி திரள் திரளாகக் கூடி கூடி; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும்; கூத்தர் போல தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் ஆடுகின்றோம்