PT 10.3.8

அரக்கர்களே! இராமன் காண ஆடுங்கள்

1875 கவளயானைபாய்புரவி தேரோடரக்கரெல்லாம்
துவள * வென்றவென்றியாளன்தன் தமர்கொல்லாமே *
தவளமாடம்நீடயோத்திக் காவலன்தன்சிறுவன் *
குவளைவண்ணன்காண ஆடீர் குழமணிதூரமே.
1875 kaval̤a yāṉai pāy puravi * terŏṭu arakkar ĕllām
tuval̤a * vĕṉṟa vĕṉṟiyāl̤aṉ-taṉ tamar kŏllāme **
taval̤a māṭam nīṭu ayottik * kāvalaṉ-taṉ ciṟuvaṉ *
kuval̤ai vaṇṇaṉ kāṇa āṭīr- * kuzhamaṇitūrame-8

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1875. “The monkey army of Rāma, after wearing us down and conquering us, should not kill our elephants that eat so well or our galloping horses. They should not destroy our chariots or the Rākshasas. Let the dark kuvalai-colored Rāma, the king of Ayodhya surrounded with tall coral-studded palaces see us. Let us dance. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கவள யானை கவளங்கொள்ளும் யானைகளோடும்; பாய் புரவி பாய்ந்து வரும் குதிரைகளோடும்; தேரொடு தேரொடும்; அரக்கர் எல்லாம் அரக்கர்கள் எல்லாம்; துவள துவண்டு போகும்படி; வென்ற வெற்றி கொண்ட; வென்றியாளன் தன் பெருமானின்; தமர் கிங்கரர்களான வானரவீரர்கள்; கொல்லாமே கொல்லாதபடி; தவள நீடு வெண்மையான நீண்ட; மாடம் மாடமாளிகையுள்ள; அயோத்தி அயோத்திமா நகர்க்கு; காவலன் தன் அரசரான தசரதனின்; சிறுவன் புதல்வன் ராமன்; குவளை குவளை மலர்போன்ற; வண்ணன் நிறத்தையுடைய பெருமான்; காண கண்டு களிக்க; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடீர் ஆடுங்கள்