PT 10.3.2

அனுமா! சுக்கிரீவா! அங்கதா! அருள்வீர்

1869 எம்பிரானே! என்னையாள்வாய்! என்றென்றுஅலற்றாதே *
அம்பின்வாய்ப்பட்டாற்றகில்லாது இந்திரசித்தழிந்தான் *
நம்பிஅநுமா! சுக்கிரீவ! அங்கதனே! நளனே! *
கும்பகர்ணன்பட்டுப்போனான் குழமணிதூரமே.
1869 ĕmpirāṉe ĕṉṉai āl̤vāy * ĕṉṟu ĕṉṟu alaṟṟāte *
ampiṉ vāyppaṭṭu āṟṟakillātu * intiracittu azhintāṉ **
nampi anumā cukkirīvā * aṅkataṉe nal̤aṉe *
kumpakarṇaṉ paṭṭuppoṉāṉ- * kuzhamaṇitūrame-2

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1869. “Indrajit did not praise the name of the god. He said, ‘Our dear king, take care me. ’ He could not fight with Rāma and was killed by Rāma’s arrows. O Nambi Hanuman! Sugriva! Angada! Nala! Kumbhakarna lost and was killed in the war. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்திரசித்து இந்திரஜித்தானவன்; எம்பிரானே! எம் ராமபிரானே!; என்னை என்னை; ஆள்வாய்! என்று ஆட்கொள்வாய் என்று; என்று அலற்றாதே வணங்கிப் பணியாமல்; அம்பின் வாய்ப்பட்டு அம்புக்கு இறையாகி; ஆற்றகில்லாது தரித்திருக்க மாட்டாமல்; அழிந்தான் முடிந்து போனான்; நம்பி அநுமா! நம்பி அநுமனே!; சுக்கிரீவா! சுக்கிரீவனே!; அங்கதனே! நளனே! அங்கதனே! நளனே!; கும்பகர்ணன் கும்பகர்ணனும்; பட்டுப் போனான் முடிந்து போனான் நாங்கள்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் ஆடுகின்றோம்