PT 10.1.7

தேரழுந்தூரும் திருவெஃகாவும்

1854 கூந்தலார்மகிழ் கோவலனாய் * வெண்ணெய்
மாந்தழுந்தையில் கண்டுமகிழ்ந்துபோய் *
பாந்தள்பாழியில் பள்ளிவிரும்பிய *
வேந்தனைச்சென்றுகாண்டும் வெஃகாவுளே.
1854 kūntalār makizh * kovalaṉ āy * vĕṇṇĕy
māntu azhuntaiyil * kaṇṭu makizhntu poy **
pāntal̤-pāzhiyil * pal̤l̤i virumpiya *
ventaṉaic cĕṉṟu kāṇṭum- * vĕḵkāvul̤e-7

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1854. I will find happiness in Vennai-Thiruvazhundur seeing the cowherd who is loved by women with beautiful hair. I will go to Thirupāndalpāzhi where the king of gods wishes to rest on Adisesha and I will go to Thiruvekka after that.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூந்தலார் சிறந்த கூந்தலையுடைய பெண்கள்; மகிழ் மகிழும்படி; கோவலனாய் கோபாலனாய்; வெண்ணெய் வெண்ணெய்; மாந்து உண்ட கண்ணனை; அழுந்தையில் திருவழுந்தூரில்; கண்டு மகிழ்ந்து கண்டு மகிழ்ந்து; போய் சென்று வணங்கினோம்; பாந்தள் ஆதிசேஷனான; பாழியில் படுக்கையில்; பள்ளி விரும்பிய பள்ளிகொள்ள விரும்பிய; வேந்தனை பெருமானை; வெஃகாவுளே திருவெஃகாவில்; சென்று காண்டும் வணங்குவோம்