PT 10.1.3

திருவாலியும் திருநாங்கூரும்

1850 வேலையாலிலைப் பள்ளிவிரும்பிய *
பாலையாரமுதத்தினைப் பைந்துழாய் *
மாலைஆலியில் கண்டுமகிழ்ந்துபோய் *
ஞாலமுன்னியைக்காண்டும் நாங்கூரிலே.
1850 velai āl ilaip * pal̤l̤i virumpiya *
pālai ār amutattiṉaip * pain tuzhāy **
mālai āliyil * kaṇṭu makizhntu poy *
ñālam uṉṉiyaik kāṇṭum- * nāṅkūrile-3

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1850. Thirumāl who is sweet as milk and nectar, and lies on a banyan leaf as a baby on the ocean is adorned with green thulasi garlands. I will find joy seeing him in Thiruvāli and then I will go to Manimādakkoyil in Nangur and see him in front of the nyalal tree.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேலை பிரளயக் கடலில்; ஆல் இலை ஆல் இலையில்; பள்ளி விரும்பிய துயில்வதை விரும்புபவனும்; பாலை பாலைப் போன்றவனும்; ஆர் அருமையான; அமுதத்தினை அமிருதம் போன்றவனுமான; பைந் துழாய் துளசி மாலை அணிந்தவனை; ஆலியில் கண்டு திருவாலியில் சென்று; மகிழ்ந்து போய் வணங்கி மகிழ்ந்தோம்; ஞாலம் உன்னியை உலகிலுள்ளோர் அனைவரும்; மாலை வணங்கும் பெருமானை; நாங்கூரிலே திருநாங்கூரில்; காண்டும் சென்றும் வணங்குவோம்