PT 1.9.7

சிறுபிள்ளைத்தனம் உள்ளவன்; என்னை ஆட்கொள்

1034 தெரியேன்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன் *
பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத்துஏழையானேன் *
கரிசேர்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா! *
அரியே! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
PT.1.9.7
1034 tĕriyeṉ pālakaṉāyp * pala tīmaikal̤ cĕytumiṭṭeṉ *
pĕriyeṉ āyiṉapiṉ * piṟarkke uzhaittu ezhai āṉeṉ **
kari cer pūm pŏzhil cūzh * kaṉa mā malai veṅkaṭavā! *
ariye vantu aṭainteṉ * aṭiyeṉai āṭ kŏṇṭarul̤e-7

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1034. O mighty lion of Thiruvēṅkaṭam, where firm mountains stand, encircled by flower-filled groves and roaming elephants! As a child, in ignorance, I committed many sins. When I grew older, I toiled for others and became poor. Now, weary and worn, I have come and surrendered at Your feet. O Lord who dwells on the sacred hill, take me in—this servant who has no one else.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரி சேர் யானைகள் இருக்கும்; பூம் பொழில் அழகிய சோலைகளாலே; சூழ் சூழ்ந்த; கன மா திடமான பெரிய; மலை வேங்கடவா திருமலையிலே; வாழ்பவனே! இருப்பவனே!; அரியே! ஸிம்மம்போன்றவனே!; பாலகனாய் பாலகனாயிருந்தபோது; தெரியேன் அறிவில்லாதவனாய்; பல தீமைகள் பல பாவங்களை; பெரியேன் பெரிவனாக; ஆயினபின் ஆனபின்பு; பிறர்க்கே உழைத்து பிறர்க்கே உழைத்து; ஏழை ஆனேன் ஏழை ஆனேன்; வந்து இன்று உன்னை வந்து; அடைந்தேன் அடைந்தேன்; அடியேனை தாஸனான என்னை; ஆட்கொண்டருளே ஆட்கொண்டருளவேணும்
kari elephants; sĕr present in abundance; filled with flowers; pozhil by garden; sūzh surrounded; kanam firm; mā malai huge mountain; vĕngadavā ŏh one who is having thirumalā as your residence!; ariyĕ ŏh lion!; pālaganāy while being a child; theiryĕn being ignorant; pala thīmaigal̤ (further) many cruel acts; seydhumittĕn having performed; periyĕn āyina pin after becoming a youth; piṛarkkĕ needed for others; uzhaiththu searched and gave; ĕzhai ānĕn ī, the servitor, lost my ability (now); vandhu adaindhĕn ī came and surrendered;; adiyĕnai āt koṇdu arul̤ kindly accept my service.