PT 1.9.5

பாவங்களே செய்தவன்; எனினும் என்னை அடிமைகொள்

1032 எப்பாவம்பலவும் இவையேசெய்துஇளைத்தொழிந்தேன் *
துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன் *
செப்பார்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை * என்
அப்பா! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
PT.1.9.5
1032 ĕp pāvam palavum * ivaiye cĕytu il̤aittŏzhinteṉ *
tuppā niṉ aṭiye * tŏṭarntu ettavum kiṟkiṉṟileṉ **
cĕppu ār tiṇ varai cūzh * tiruveṅkaṭa mā malai * ĕṉ
appā!-vantu aṭainteṉ * aṭiyeṉai āṭ kŏṇṭarul̤e-5

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Saranagathi

Reference Scriptures

BG. 9-31

Divya Desam

Simple Translation

1032. O my Lord, the mighty One. You have a firm resolve, shining like radiant copper! You dwell in Thiruvēṅkaṭam, a sacred hill surrounded by towering peaks. I have committed countless sins and grown weary from their burden. I lack the strength to follow Your feet or sing Your praise with true devotion. Yet still, I have come to You. Please accept me, this lowly servant, and make me Yours.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செப்புஆர் திண் செப்புப் போன்ற திடமான; வரை சூழ் மலைகளாலே சூழப்பட்ட; திருவேங்கட மாமலை திருமலையிலிருப்பவனே!; துப்பா! சக்தியுடையவனே!; என் அப்பா! என் நாதனே!; எப்பாவம் பலவும் பலவித பாபங்களை; இவையே செய்து செய்து; இளைத்தொழிந்தேன் இளைத்தொழிந்தேன்; நின் அடியே உன் திருவடிகளை; தொடர்ந்து ஏத்தவும் பின்பற்றி பக்தியுடன்; கிற்கின்றிலேன் துதிக்கவும் சக்தியற்றவனானேன்; வந்து அடைந்தேன் உன்னையே வந்து அடைந்தேன்; அடியேனை தொண்டனான என்னை; ஆட்கொண்டருளே ஆட்கொண்டருளவேணும்
seppu ār like copper which is protective; thiṇ firm; varai by hills; sūzh surrounded; thiruvĕngada mā malai being the one who is having thirumalā as his abode; en for followers like me; appā ŏh benefactor!; thuppā ŏh one who is capable!; eppāvam palavum ivaiyĕ these many types of sins; seydhu performed; il̤aiththozhindhĕn became sorrowful (on hearing about the results of such sins); nin adi your highness- divine feet; thudarndhu followed; ĕththavum to surrender with bhakthi; kiṛkinṛilĕn being incapable; vandhu adaindhĕn ī came and surrendered;; adiyĕnai āt koṇdu arul̤ kindly accept my service.