PT 1.9.4

நல்லறம் ஒன்றும் செய்யாதவன் நான்

1031 குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த் தொழிந்தேன் *
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன் *
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்திருவேங்கடவா! *
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
PT.1.9.4
1031 kulam-tāṉ ĕttaṉaiyum * piṟante iṟantu ĕyttŏzhinteṉ *
nalam-tāṉ ŏṉṟum ileṉ * nallatu or aṟam cĕytum ileṉ **
nilam toy nīl̤ mukil cer * nĕṟi ār tiruveṅkaṭavā! *
alanteṉ vantu aṭainteṉ * aṭiyeṉai āṭ kŏṇṭarul̤e-4

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1031.O Lord of Thiruvēṅkaṭam, where great clouds drift across the earth’s vast paths. I have been born and died in every kind of clan, worn down through countless lives. I hold no virtue, have done no act of dharma. I have only suffered. Now I’ve come to You. This lowly servant. Please accept me, and make me Yours.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிலம் தோய் பூமண்டலத்தில் ஸஞ்சரிக்கும்; நீள் முகில் சேர் நீண்ட மேகங்களையுடைய; நெறி ஆர் திரு வேங்கடவா! திருமலையிலிருப்பவனே!; எத்தனையும் குலம் தான் எல்லாக் குலங்களிலும்; பிறந்தே இறந்து பிறப்பதும் இறப்பதுமாக; எய்த்தொழிந்தேன் இளைத்துப் போனேன் அதனால்; நலம் தான் ஒன்றுமிலேன் ஒருவகை நன்மையுமில்லை; நல்லதோர் அறம் நல்ல தருமமொன்றும்; செய்தும் இலேன் செய்ததில்லை; அலந்தேன் பல கஷ்டங்களை அநுபவித்த நான்; வந்து அடைந்தேன் உன்னை வந்து பற்றினேன்; அடியேனை தாஸனான என்னை; ஆட்கொண்டருளே ஆட்கொண்டருளவேண்டும்
nilam on earth; thŏy resting; nīl̤ mugil huge clouds; sĕr roaming; neṛi path; ār having; thiruvĕngadavā ŏh leader of ṣrī vĕnkatādhri!; eththanai kulamum īn every clan; piṛandhu iṛandhu taking birth and dying; eyththu ozhindhĕn having weakened; oru nalamum ilĕn not having any goodness; nalladhu having goodness (in getting the result); ŏr aṛamum performance of any sādhanam (means); seydhilĕn not having done; alandhĕn ī, the servitor, who suffered (in every birth); vandhu adaindhĕn ī came and surrendered;; adiyĕnai āt koṇdu arul̤ kindly accept my service.