PT 1.7.6

தேவர்கள்கூட அஞ்சும் இடம்

1013 எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய்எயிற்றொடுஇதுஎவ்வுருவென்று *
இரிந்துவானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம் *
நெரிந்தவேயின்முழையுள்நின்று நீணெறிவாய்உழுவை *
திரிந்தஆனைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே.
PT.1.7.6
1013 ĕrinta paiṅ kaṇ ilaṅku pezh vāy * ĕyiṟṟŏṭu itu ĕv uru ĕṉṟu *
irintu vāṉor kalaṅki oṭa * irunta ammāṉatu iṭam **
nĕrinta veyiṉ muzhaiyul̤ niṉṟu * nīl̤ nĕṟivāy uzhuvai *
tirinta āṉaic cuvaṭu pārkkum * ciṅkavel̤kuṉṟame-6

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1013. With glowing green eyes and flaming rage, a wide-mouthed Narasimha stood, His teeth shining fiercely. “Is this a form?!” the Devas cried in fear, scattering in all directions. He remains there still, deep inside thickets of bamboo, where tigers roam and wild elephants follow old paths through narrow trails. This is Singaveḷkuṉṟam, His mighty abode.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எரிந்த கோபத்தாலே எரிந்த; பைங்கண் கண்களையுடைய; இலங்கு பேழ்வாய் பெரிய வாயோடு இருக்கும்; எயிற்றொடு பற்களோடு கூடின நரஸிம்மனைப் பார்த்து; இது எவ்வுரு இது என்ன பயங்கரமான ரூபம்!; என்று என்று அஞ்சி பயந்து; இரிந்து வானோர் தேவர்கள் அங்குமிங்கும் சிதறி; கலங்கி ஓட கலங்கி ஓடும்படியாக; இருந்த அம்மானது இருந்த எம்பெருமான்; இடம் இருக்கும் இடம்; நெரிந்த வேயின் நெருக்கமான மூங்கில்; முழையுள் நின்று துளைவழியாக புதர்களின்; நீள் நெறி வாய் த்வாரத்தின் வழியே; உழுவை புலிகளானவை; திரிந்த ஆனை காட்டில் திரிகின்ற யானைகள்; சுவடு போன அடையாளத்தை ஆராய்ந்து; பார்க்கும் பார்க்குமிடம்; சிங்கவேள்குன்றமே அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றம்
erindha burning due to anger; pai greenish; kaṇ eyes; ilangu radiant; pĕzh vāy having huge mouth; eyiṝodu with teeth (looking at such a form); idhu evvuru what kind of a form is this?; enṛu anji fearing in such manner; vānŏr dhĕvathās; irindhu becoming scattered here and there; kalangi hobbled; ŏda to run away; irundha mercifully seated; ammānadhu sarvĕṣvaran-s; idam abode is; nerindha joined together; vĕyin bamboo-s; muzhaiyul̤ ninṛu through the gap; uzhuvai tigers; nīl̤ neṛivāy in the vast path; thirindha roaming around; ānai elephants (which travelled); suvadu footprints; pārkkum seeing (by observing the smell); singavĕl̤ kunṛamĕ singavĕl̤ kunṛam