PT 1.7.4

தேவதைகளே செல்லத்தக்க இடம்

1011 எவ்வும்வெவ்வேல் பொன்பெயரோன் ஏதலனின்னுயிரை
வவ்வி * ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் *
கவ்வுநாயும்கழுகும்உச்சிபோதொடுகால்சுழன்று *
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.
PT.1.7.4
1011 ĕvvum vĕv vel pŏṉpĕyaroṉ * etalaṉ iṉ uyirai
vavvi * ākam val̤ ukirāl * vakirnta ammāṉatu iṭam **
kavvum nāyum kazhukum * uccippotŏṭu kāl cuzhaṉṟu *
tĕyvam allāl cĕlla ŏṇṇāc * ciṅkavel̤kuṉṟame-4

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1011. He crushed the fierce enemy, the cruel Hiranyan who is known to cause sorrow, snatched his life, and tore his body with sharp claws. That Lord now dwells in a place where wild dogs and vultures roam, and where scorching sun and spinning winds torment the land. Except His true devotees, none can reach Singaveḷkuṉṟam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எவ்வம் துன்பம் அளிக்கும்; வெவ் வேல் வேலை யுடைய; ஏதலன் விரோதியான; பொன்பெயரோன் இரணியனுடைய; இன் உயிரை இனிய உயிரை; வவ்வி வதைத்து; ஆகம் அவன் சரீரத்தை; வள் உகிரால் கூர்மையான நகங்களாலே; வகிர்ந்த கிழித்தெறிந்த; அம்மானது இடம் பெருமான் இருக்குமிடம்; கவ்வும் நாயும் நாய்களும்; கழுகும் கழுகுகளும்; உச்சிப்போதொடு கடும் வெய்யிலும்; கால் சுழன்று சுழல்காற்றும்; தெய்வம் இருப்பதால் அடியார்களைத் தவிர; அல்லால் வேறு யாரும்; செல்லஒண்ணா போகமுடியாத; சிங்கவேள்குன்றமே அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றம்
evvam causing sorrow; vem cruel; vĕl having spear; ĕdhalan enemy; pon peyarŏn hiraṇya-s; in uyirai good life; vavvi snatched; āgam (his) body; val̤ ugirāl vagirndha ammānadhidam the abode of the lord who tore with his strong divine nail; kavvum biting (those who are seen); nāyum dogs; kazhugum (similar) eagles; uchip pŏdhodu with sun; kāl suzhanṛu to have the feet hobble; dheyvam allāl except for the devotees who worship him with love; sella oṇṇā not possible to go and reach; singavĕl̤ kunṛam singavĕl̤ kunṛam