PT 1.7.10

இவற்றைப் படிப்போர்க்குத் தீங்கு வராது

1017 செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய *
எங்களீசனெம்பிரானை இருந்தமிழ் நூற்புலவன் *
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறைதார்க்கலியன் *
செங்கையாளன்செஞ்சொல்மாலை வல்லவர்தீதிலரே. (2)
PT.1.7.10
1017 ## cĕṅ kaṇ āl̤i iṭṭu iṟaiñcum * ciṅakavel̤kuṉṟu uṭaiya *
ĕṅkal̤ īcaṉ ĕm pirāṉai * irun tamizh nūl-pulavaṉ **
maṅkai āl̤aṉ maṉṉu tŏl cīr * vaṇṭu arai tārk kaliyaṉ *
cĕṅkaiyāl̤aṉ cĕñcŏl mālai * vallavar tītu ilare-10

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1017. At Singaveḷkuṉṟam, where fierce red-eyed lions come offering elephant tusks in worship, dwells our Lord—our own beloved Master. This divine garland of pure words that buzz like a bee is sung by Kaliyan, the generous king of Thirumangai and the scholar of rich Tamil songs. Those who learn and recite these verses shall never be touched by evil.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங்கண் சிவந்த கண்களையுடைய; ஆளி சிங்கங்கள்; இட்டு யானைத் தந்தங்களை ஸமர்ப்பித்து; இறைஞ்சும் வணங்குமிடமான; சிங்கவேள்குன்று சிங்கவேள் குன்றத்தை; உடைய இருப்பிடமாகவுடைய; எங்கள் ஈசன் எங்கள் ஈசன்; எம் பிரானை எம் பிரானை; இருந் தமிழ் பெருமையுடைய தமிழ்; நூல் புலவன் நூல்களைப் புனைந்த புலவன்; மங்கை ஆளன் திருமங்கைக்கு அரசன்; மன்னு தொல்சீர் பெரும் செல்வம் உடையவரும்; வண்டு அறை வண்டுகள் ரீங்கரிக்கும்; தார் மாலையையுடைய; செங்கையாளன் மிக்க உதார குணமுள்ள; கலியன் திருமங்கைஆழ்வாரருளிச்செய்த; செஞ் சொல் மாலை செஞ் சொல் மாலையை; வல்லவர் கற்க வல்லவர்கள்; தீது இலரே தீமையின்றி வாழ்வர்
sem reddish; kaṇ having eyes; āl̤i lions; ittu offered (the objects for worship at the divine feet); iṛainjum surrendering; singavĕl̤ kunṛu singavĕl̤ kunṛam (hill); udaiya having as his abode; engal̤ even for us who are samsāris (materialistic people); īsan being the lord; empirānai on sarvĕṣvaran who is my benefactor; iru great; thamizh nūl in thamizh ṣāsthram; pulavan being an expert; mangai āl̤an being the king of thirumangai region; thol mannu eternally remaining; sīr wealth; vaṇdu beetles; aṛai making noise; thār garland; sem kai āl̤an being very generous; kaliyan mercifully spoken by thirumangai āzhvār; sem sol mālai garland of honest words; vallavar those who can learn; thīdhu ilar will be free from evil aspects.