PT 1.6.2

வாழ்நாளை வீணாக்கிவிட்டேனே !

999 சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார்
திறத்தனாய் அறத்தையேமறந்து *
புலம்படிந்துண்ணும்போகமேபெருக்கிப்
போக்கினேன் பொழுதினைவாளா *
அலம்புரிதடக்கைஆயனே! மாயா!
வானவர்க்கரசனே! * வானோர்
நலம்புரிந்திறைஞ்சும்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்!
PT.1.6.2
999 சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார் * திறத்தனாய் அறத்தையே மறந்து *
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் * போக்கினேன் பொழுதினை வாளா **
அலம் புரி தடக்கை ஆயனே மாயா * வானவர்க்கு அரசனே *
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய் 2
999 cilampu aṭi uruviṉ karu nĕṭuṅ kaṇṇār * tiṟattaṉāy aṟattaiye maṟantu *
pulaṉ paṭintu uṇṇum pokame pĕrukkip * pokkiṉeṉ pŏzhutiṉai vāl̤ā **
alam puri taṭakkai āyaṉe māyā * vāṉavarkku aracaṉe *
vāṉor nalam purintu iṟaiñcum tiruvaṭi aṭainteṉ * naimicāraṇiyattul̤ ĕntāy-2

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

999. O my Father in Naimiśāraṇyam! I gave myself to women with ankleted feet and long, dark eyes, forgetting dharma, sinking into pleasures, chasing them, feeding them, and wasting my days in vain delight. O cowherd Lord with the plough in hand! O Māyā, King of the gods, the One whom Nityasuris lovingly praise—I have now come to Your holy feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நைமிசாரணியத்துள் நைமிசாரணியத்தில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; சிலம்பு சிலம்புகளை அணிந்த; அடி உருவின் கால்களின் அழகையும்; கருநெடும் கறுத்து நீண்ட கண்களையும் உடைய; கண்ணார் பெண்களுக்கு; திறத்தனாய் அடிமை ஆனேன்; அறத்தையே மறந்து தருமங்களை மறந்து; புலன் படிந்து இந்திரிய சுகங்களில்; உண்ணும் அழுந்தி; போகமே மேன் மேலும் அதையே; போக்கினேன் பெருக்கி அதிகப்படுத்திக்கொண்டு; வாளாபொழுதினை வாழ்நாளை; போக்கினேன் வீணாகக் கழித்தேன்; அலம் புரி கலப்பையை; தடக்கை கையிலேந்திய; ஆயனே! இடையர் குல கோபால க்ருஷ்ணனே!; மாயா! மாயனே!; வானவர்க்கு அரசனே! தேவர்களுக்கு அரசனே!; வானோர் நித்யஸூரிகள்; நலம் புரிந்து இறைஞ்சும் பக்தியுடன் வணங்கும்; திருவடி உன் திருவடிகளை; அடைந்தேன் நான் சரணமடைந்தேன்
naimisāraṇiyaththul̤ mercifully residing in ṣrī naimiṣāraṇyam; endhāy ŏh my lord!; silambu wearing an anklet; uruvil being beautiful; adi feet; karu nedu dark and wide; kaṇṇār thiṛaththanāy being attached towards women who have such (dark and wide) eyes; aṛaththai you who are the embodiment of dharma; maṛandhĕ without thinking about even a little bit (about you); pulan senses; padindhu remaining firmly; uṇṇum experience; bŏgamĕ pleasures; perukki increased further; pozhudhinai time; vāl̤ā in a useless manner; pŏkkinĕn have spent;; alam puri Carrying the weapon, plough; thadam huge; kai having divine hands; āyanĕ oh one who incarnated in the cowherd clan!; māyā ŏh one who has amaśing activities!; vānavarkku for dhĕvathās; arasanĕ ŏh king!; vānŏr nithyasūris; nalam purindhu with love; iṛainjum worshipping; thiruvadi divine feet (of your highness); adaindhĕn ī approached as the refuge.