PT 1.5.7

நரசிம்மன் வாழுமிடம் சாளக்கிராமம்

994 ஏனோர் அஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியஇரணியனை *
ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன் தானேஇருசுடராய் *
வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாய்அலைநீருலகனைத்தும்
தானாய் * தானுமானாந்தன் சாளக்கிராமம்அடை நெஞ்சே!
PT.1.5.7
994 eṉor añca vĕm camattul̤ * ari āyp pariya iraṇiyaṉai *
ūṉ ār akalam pil̤avu ĕṭutta * ŏruvaṉ tāṉe iru cuṭar āy **
vāṉ āyt tī āy mārutam āy * malai āy alai nīr ulaku aṉaittum
tāṉ āy * tāṉum āṉāṉ-taṉ * cāl̤akkirāmam aṭai nĕñce-7 **

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

994. To make the demons tremble, He became fierce Narasimha, and tore apart the chest of Hiraṇya in a blazing battle. He is the sun and moon, the fire and sky, the mountains and roaring seas. He is all the worlds and more. This wondrous Lord with a divine form and incomparable strength dwells in ŚālakkiRāmam. O heart, go! Seek that sacred place!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏனோர் சத்துருக்களான அசுரர்கள்; அஞ்ச பயப்படும்படியாக; அரி ஆய் நரசிம்ம மூர்த்தியாகி; வெம் சமத்துள் கடுமையான போரில்; பரிய பருத்த சரீரத்தையுடைய; இரணியனை இரணியனை; ஊன் ஆர் அகலம் பருத்த மார்பு; பிளவு எடுத்த ஒருவன் கிழியும்படி செய்தவனும்; தானே இரு சுடர் ஆய் தானே சந்த்ர ஸூர்யர்களாயும்; வான் ஆய் தீயாய் ஆகாசமாயும் அக்னியாயும்; மாருதம் ஆய் வாயுவாயும்; மலை ஆய் அலை நீர் மலையாயும் கடலாயும்; உலகு உலகங்கள்; அனைத்தும் அனைத்துமாய் இருப்பவனும்; தான் ஆய் தானும் அஸாதாரணமான திவ்யமங்கள; ஆனான் விக்ரஹத்தையுடைய; தன் எம்பெருமான் இருக்கும் இடம்; சாளக்கிராமம் திவ்ய தேசமாகிய சாளக்கிராமத்தை; அடை நெஞ்சே! ஓ மனமே! நீ அடைவாய்
ĕnŏr demons, who are enemies; anja to fear; vem cruel; samaththul̤ in the battle; ariyāy being narasimha; pariya one who is having big body; iraṇiyanai hiraṇya-s; ūn ār filled with flesh; agalam chest; pil̤avu eduththa tore down; oruvan having incomparable strength; thānĕ such sarvĕṣvaran; iru sudarāy being chandhra and sūrya; vānāy being sky; thīyāy being fire; malaiyāy being mountains; alai nīr surrounded by ocean with waves; ulagu anaiththum all worlds; thānāy remained to be directly identified as him; thānum ānān than the merciful abode of sarvĕṣvaran who is also having distinguished form; sāl̤akkirāmam adai nenjĕ ŏh mind! ṛeach such ṣrī sāl̤agrāmam.