PT 1.5.3

எங்கும் நிறைந்தவன் எம்பெருமான்

990 உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும் *
நிலவும்சுடரும்இருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன் * வானோர்தம்பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் * சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே!
PT.1.5.3
990 ulavu tiraiyum kula varaiyum * ūzhi mutalā ĕṇ tikkum *
nilavum cuṭarum irul̤um āy * niṉṟāṉ vĕṉṟi viṟal āzhi
valavaṉ ** vāṉor-tam pĕrumāṉ * maruvā arakkarkku ĕññāṉṟum
calavaṉ * calam cūzhntu azhaku āya * cāl̤akkirāmam aṭai nĕñce-3 **

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

990. He is the One who holds the waves of the seas, the great mountains, time itself, the eight directions, sun, moon, and even darkness—all within Himself. He bears the mighty discus of victory and is the Lord of the gods in the skies. For the wicked rākshasas, He is forever their fierce destroyer. Surrounded by clear waters and full of beauty is Śālagrāmam, His sacred abode. O heart, go and reach that place!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலவு திரையும் அலைகளையுடைய கடலும்; குல வரையும் குலபர்வதங்களும்; ஊழி முதலா ஊழி காலம் முதலாக; எண் திக்கும் எட்டுத்திசைகளும்; நிலவும் சுடரும் சந்திரனும் ஸூர்யனும்; இருளுமாய் இருட்டும் ஆகிய; நின்றான் இவைகளுக்கு அந்தர்யாமியாயிருப்பவனும்; வென்றி வெற்றியையும்; விறல் ஆழி வலவன் வலக்கையில் ஆழியையும் உடைய; வானோர் தம் பெருமான் தேவாதிதேவனும்; மருவா அரக்கர்க்கு அரக்கர்கள் விஷயத்தில்; எஞ்ஞான்றும் எப்போதுமே; சலவன் சத்ருவானவன்; சலம் சூழ்ந்து ஜலத்தால் சூழ்ந்த; அழகு ஆய எம்பெருமான் இருக்கும் அழகிய; சாளக்கிராமம் திவ்ய தேசமாகிய சாளக்கிராமத்தை; அடை நெஞ்சே! ஓ மனமே! நீ அடைவாய்
ulavu roaming; thiraiyum ocean having waves; kula varaiyum seven anchoring mountains (such as mĕru); ūzhi mudhalā time etc; eṇ dhikkum entities in eight directions; nilavum chandhra (moon); sudarum sūrya (sun); irul̤um darkness, for all these; āy being prakāri (substratum); ninṛān one who remained; venṛi victory; viṛal and having strength; āzhi thiruvāzhi (divine sudharṣana chakra); valavan one who holds in his right hand; vānŏr tham for brahmā et al; perumān being the lord; engyānṛum at all times; maruvā those who don-t surrender (unto him); arakkarkku for the rākshasas; salavan sarvĕṣvaran who is the enemy and who is eternally residing; salam by water; sūzhndhu being surrounded; azhagāya beautiful; sāl̤akkirāmam adai nenjĕ ŏh mind! ṭry to reach ṣrī sāl̤agrāmam.