PT 1.3.8

நற்கதி வேண்டுமானால் பதரி செல்க

975 ஈசிபோமின்ஈங்குஇரேன்மின் *
இருமியிளைத்தீர் *
உள்ளம் கூசியிட்டீரென்றுபேசும் *
குவளையங்கண்ணியர்பால் **
நாசமானபாசம்விட்டு *
நல்நெறிநோக்கலுறில் *
வாசம்மல்குதண்துழாயான் *
வதரிவணங்குதுமே
PT.1.3.8
975 īci pomiṉ īṅku ireṉmiṉ * irumi il̤aittīr * ul̤l̤am
kūci iṭṭīr ĕṉṟu pecum * kuval̤ai am kaṇṇiyar pāl **
nācam āṉa pācam viṭṭu * nal nĕṟi nokkal uṟil *
vācam malku taṇ tuzhāyāṉ * vatari vaṇaṅkutume (8)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

975. Before they mock you, “Chī! You cough, you tremble, your heart is weak. Leave this place!” Before you’re shamed by sharp-eyed women, Leave behind ruinous bonds of lust, seek the good path, And worship at Badrinath, where He wears cool fragrant tulasi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருமி இருமலும்; இளைத்தீர் இளைப்புமாக இருக்கிறீர்கள்; உள்ளம் கூசி இட்டீர் உள்ளம் கூசிவிட்டீர்கள்; ஈசி போமின் இங்கிருந்து போய் விடுங்கள்; ஈங்கு இரேன்மின் இங்கே இருக்காதீர்கள்; என்று என்றிப்படி; பேசும் அவமரியாதையாகப் பேசுகிற; குவளை அம் கருநெய்தல் போன்ற அழகிய; கண்ணியர் கண்களையுடைய; பால் பெண்களிடத்தில்; நாசம் ஆன நாசம் ஆன; பாசம் விட்டு ஆசாபாசத்தை தொலைத்து; நல் நெறி நல்வழி போக; நோக்கல் உறில் பார்ப்பாயாகில்; வாசம் மல்கு மணம் மிகுந்த; தண் குளிர்ந்த திருத்துழாய் மாலையுடன்; துழாயான் எம்பெருமான் இருக்கும்; வதரி வணங்குதுமே வதரியை வணங்குவோம்
pŏmin ṅo away; īsi -chī! chī!- (thamizh phrase to show disgust); īngu here; irĕnmin don-t stay; irumi due to cough; il̤aiththīr have a weakened body (hearing our words); ul̤l̤am kūsi ittīr felt shameful in your heart; enṛu pĕsum those who speak this way; kuval̤ai like a kuval̤ai flower; am beautiful; kaṇṇiyarpāl towards women who have eyes; nāsamāna pāsam attachment which will lead to destruction; vittu giving up; nal neṛi nŏkkal uṛil while looking out for the noble path; vāsam malgu filled with fragrance; thaṇ cool; thuzhāyān where sarvĕṣvaran who is adorning thiruththuzhāy (thul̤asi) is permanently residing; vadhari ṣrī badhari; vaṇangudhum let us worship