PT 1.2.3

கண்ணபிரான் இருக்குமிடம் திருப்பிருதி

960 துடிகொள்நுண்ணிடைச் சுரிகுழல் *
துளங்கெயிற்றிளங்கொடிதிறத்து * ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன் *
இருந்தநல்லிமயத்து **
கடிகொள்வேங்கையின் நறுமலரமளியின் *
மணியறைமிசை வேழம் *
பிடியினோடு வண்டிசைசொலத்துயில்கொளும் *
பிரிதிசென்றடைநெஞ்சே!
PT.1.2.3
960 tuṭi kŏl̤ nuṇ iṭaic curi kuzhal * tul̤aṅku ĕyiṟṟu il̤aṅkŏṭi tiṟattu * āyar
iṭi kŏl̤ vĕm kural iṉa viṭai aṭarttavaṉ * irunta nal imayattu **
kaṭi kŏl̤ veṅkaiyiṉ naṟu malar amal̤iyiṉ * maṇi aṟaimicai vezham *
piṭiyiṉoṭu vaṇṭu icai cŏlat tuyilkŏl̤um * piriti cĕṉṟu aṭai nĕñce!(3)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

960. For the sake of Nappinnai, Whose slender waist curves like a drum, With curling hair and teeth that gleam, The Lord subdued seven fierce bulls, That roared like thunder. He now resides in the sacred Himalayas, Where bees hum sweet melodies, And the breeze carries fragrance From blooming vengai flowers That fall on beds of precious blue stones. There, in Thiruppirithi, Elephants rest peacefully beside their mates. Go, O heart, and reach that divine place!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே ஓமனமே!; துடி கொள் உடுக்கைபோன்ற; நுண் இடை நுண்ணிய இடையையும்; சுரி குழல் சுருண்ட கூந்தலையும்; துளங்கு பளபளக்கும்; எயிற்று பற்களையும் உடையவளாய்; இளங்கொடிதிறத்து இளங்கொடி போன்ற; ஆயர் நப்பின்னைக்காக; இடி கொள் இடிபோல்; வெம் குரல் பயங்கரமான குரலையுடைய; இன விடை கூட்டமாக வந்த ஏழு ரிஷபங்களை; அடர்த்தவன் அடக்கின எம்பெருமான்; இருந்த நல் இருந்த நல்ல; இமயத்துள் இமயமலையினுள்; வண்டு இசை சொல வண்டுகள் இசைபாட; மணி அறைமிசை இந்திரநீல மணிமயமான; கடி கொள் பாறைகளின் மேல்; வேங்கையின் வேங்கைமரத்தின்; நறு மலர் மணம் மிக்க புஷ்ப; அமளியின் படுக்கையிலே; வேழம் யானை; பிடியினோடு தன் பேடையோடு; துயில்கொளும் உறங்குமிடமான; பிரிதி சென்று அடை திருப்பிரிதியை சென்று வணங்குக
thudikol̤ like udukkai (a percussion instrument which is slim in the middle); nuṇ very slender; idai waist; suri curly; kuzhal hair; thul̤angu shining; eyiṛu having teeth; il̤am kodi thiṛaththu for nappinnaip pirātti who resembles a young creeper; āyar herdspeople-s; idi kol̤ like a thunder; vem cruel; kural having sound; inam vidai the seven bulls which appeared in a herd; adarththavan sarvĕṣvaran who destroyed; irundha eternally residing; nal good; imayaththu in himavān; vaṇdu beetles; isai sola as they are humming; kadi kol̤ having fragrance; vĕngaiyin malabar kino tree-s; naṛum beautiful; malar flower-filled; amal̤iyil on the bed; maṇi filled with blue gem stones; aṛai misai on the rocks; vĕzham exultant elephant; pidiyinŏdu along with its female counterpart; thuyilkol̤um sleeping; piridhi thiruppiridhi; senṛu go; nenjĕ ŏh mind!; adai try to reach.