PMT 8.9

இலங்கையை அழித்தவனே! தாலேலோ

727 தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன்குலமதலாய்! *
வளையவொருசிலையதனால் மதிளிலங்கையழித்தவனே! *
களைகழுநீர்மருங்கலரும் கணபுரத்தென்கருமணியே! *
இளையவர்கட்கருளுடையாய்! இராகவனே! தாலேலோ.
727 tal̤ai avizhum naṟuṅ kuñcit * tayarataṉ taṉ kula matalāy *
val̤aiya ŏru cilai ataṉāl * matil̤-ilaṅkai azhittavaṉe **
kal̤ai kazhunīr maruṅku alarum * kaṇapurattu ĕṉ karumaṇiye *
il̤aiyavarkaṭku arul̤ uṭaiyāy * irākavaṉe tālelo (9)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

727. You, the son of Dasharatha with hair tied with fragrant flowers, bent your bow and destroyed Lankā surrounded by walls. You are the dark jewel of Kannapuram where beautiful kazuneer flowers bloom on all sides and you are compassionate and give your grace to young ones, thālelo, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தளை அவிழும் கட்டு அவிழுமளவு; நறுங் மணமுள்ள; குஞ்சி தலைமுடியையுடையவனான; தயரதன் தன் குல தசரத குல; மதலாய்! குமாரனே!; ஒரு சிலை வளைய ஒப்பற்ற வில் வளைந்திட; அதனால் அதனால்; மதிள் இலங்கை மதிள் சூழ் இலங்கையை; அழித்தவனே! அழித்தவனே!; களை கழுநீர் களயாக பிடுங்கபட்ட செங்கழுநீர்; மருங்கு அலரும் சுற்றிலும் மலரும்; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும்; என் கருமணியே! நீலரத்னம் போன்ற எம்பெருமானே!; இளையவர்கட்கு இளையவர்களுக்கு; அருள் உடையாய்! அன்பை அளிப்பவனே!; இராகவனே! தாலேலோ! ஸ்ரீராமனே! தாலேலோ!