PMT 8.5

பரதனுக்கு நாடு தந்தவனே! தாலேலோ

723 பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ *
723 pār āl̤um paṭar cĕlvam * parata nampikke arul̤i *
ārā aṉpu il̤aiyavaṉoṭu * aruṅkāṉam aṭaintavaṉe **
cīr āl̤um varai mārpā * tiruk kaṇṇapurattu arace *
tār ārum nīṇ muṭi * ĕṉ tācaratī tālelo (5)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

723. After giving your kingdom to your brother Bharathan, you went to the thick forest with your younger brother Lakshmana who loved you so. You with a handsome chest strong as a mountain, king of Thirukkannapuram, are adorned with a precious crown that rules the world. You are the son of Dasharatha, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் ஆளும் உலகத்தை ஆளும்; படர் செல்வம் பெரும் செல்வத்தை; பரத நம்பிக்கே தம்பி பரதனுக்கு; அருளி கொடுத்து; ஆரா அன்பு அளவிலா அன்புடைய; இளையவனோடு லட்சுமணனோடு; அருங்கானம் நுழைய இயலாத காட்டை; அடைந்தவனே! அடைந்தவனே!; சீர் ஆளும் வீரத்தினால் ஆளும்; வரை மார்பா! மலைபோன்ற மார்பனே!; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்து; அரசே! அரசே!; தார் ஆரும் மாலை அணிந்த; நீண் முடி நீண்ட முடியையுடைய; என் தாசரதீ! தாலேலோ! ஸ்ரீராமனே! தாலேலோ!