PMT 8.4

வில்லுக்கு ஒருவனே! தாலேலோ

722 தாமரைமேலயனவனைப் படைத்தவனே! * தயரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன்மணவாளா! * வண்டினங்கள்
காமரங்களிசைபாடும் கணபுரத்தென்கருமணியே! *
ஏமருவும்சிலைவலவா! இராகவனே! தாலேலோ.
722 tāmarai mel ayaṉavaṉaip * paṭaittavaṉe tayarataṉ taṉ *
mā matalāy * maitilitaṉ maṇavāl̤ā ** vaṇṭiṉaṅkal̤
kāmaraṅkal̤ icai pāṭum * kaṇapurattu ĕṉ karumaṇiye *
emaruvum cilai valavā * irākavaṉe tālelo (4)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

722. You who created Nānmuhan on the lotus on your navel, the wonderful son of Dasharathan, the husband of Mythili are the dark jewel of Thirukkannapuram where bees sing in the groves. You carry the best of bows that shoots heroic arrows. O Raghava (Rāma), thālelo, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாமரை மேல் நாபித் தாமரைமேல்; அயனவனை பிரமனை; படைத்தவனே! படைத்தவனே!; தயரதன் தன் தசரதனுடைய; மா மதலாய்! மூத்த குமாரனே!; மைதிலி தன் சீதையின்; மணவாளா! மணாளனே!; வண்டினங்கள் வண்டுக் கூட்டங்கள்; காமரங்கள் காமரமென்னும்; இசைபாடும் இசையைப் பாடப்பெற்ற; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும்; என் கருமணியே! நீலரத்னம் போன்ற எம்பெருமானே!; ஏமருவும் அம்புகள் பொருந்திய; சிலைவலவா! வில் வீரனே!; இராகவனே! தாலேலோ! ஸ்ரீராமனே! தாலேலோ!