PMT 8.3

சனகன் மருமகனே! தாலேலோ

721 கொங்குமலிகருங்குழலாள் கோசலைதன்குலமதலாய்! *
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகாதாசரதீ! *
கங்கையிலும்தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே! *
எங்கள்குலதின்னமுதே! இராகவனே! தாலேலோ.
721 கொங்கு மலி கருங்குழலாள் * கௌசலை தன் குல மதலாய் *
தங்கு பெரும் புகழ்ச்சனகன் * திரு மருகா தாசரதீ **
கங்கையிலும் தீர்த்த மலி * கணபுரத்து என் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே * இராகவனே தாலேலோ (3)
721 kŏṅku mali karuṅkuzhalāl̤ * kaucalai taṉ kula matalāy *
taṅku pĕrum pukazhccaṉakaṉ * tiru marukā tācaratī **
kaṅkaiyilum tīrtta mali * kaṇapurattu ĕṉ karumaṇiye
ĕṅkal̤ kulattu iṉṉamute * irākavaṉe tālelo (3)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

721. You are the best son of the lineage of Kosalai with dark hair adorned with kongu blossoms. You are the beautiful son-in-law of the king Janakan whose fame remains forever. You are the son of Dasharatha, the dark jewel of Kannapuram where pure water flows like the Ganges. You are the sweet nectar of our family, O Raghava (Rāma), thālelo, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கொங்கு மலி மணம் மிகுந்த; கருங்குழலாள் கருங்கூந்தலாள்; கௌசலைதன் கௌசலையின்; குல மதலாய்! குலக் குழந்தையே!; தங்கு பெரும் புகழ் நிலயான கீர்த்தியுடைய; சனகன் ஜனருக்கு; திரு மருகா! மாப்பிள்ளை யானவனே!; தாசரதீ! தசரதனின் திருமகனே!; கங்கையிலும் கங்காநதியை விட; தீர்த்தமலி சிறப்பான தீர்த்தங்களையுடைய; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும்; என் கருமணியே! நீலரத்னம் போன்ற எம்பெருமானே!; எங்கள் குலத்து எங்கள் ராஜவம்சத்துக் கெல்லாம்; இன்னமுதே! சுவையான அமுதம் போன்றவனே!; இராகவனே! தாலேலோ! ஸ்ரீராமனே! தாலேலோ!