PMT 8.2

எண்திசையும் ஆள்பவனே! தாலேலோ!

720 புண்டரிகமலரதன்மேல் புவனியெல்லாம்படைத்தவனே! *
திண்டிறலாள்தாடகைதன் உரமுருவச்சிலைவளைத்தாய்! *
கண்டவர்தம்மனம்வழங்கும் கணபுரத்தென்கருமணியே! *
எண்டிசையுமாளுடையாய்! இராகவனே! தாலேலோ.
720 puṇṭarika malar taṉ mel * puvaṉi ĕllām paṭaittavaṉe *
tiṇ tiṟalāl̤ tāṭakaitaṉ * uram uruvac cilai val̤aittāy **
kaṇṭavar tam maṉam vazhaṅkum * kaṇapurattu ĕṉ karumaṇiye *
ĕṇ ticaiyum āl̤uṭaiyāy * irākavaṉe tālelo (2)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

720. You created Nanmuhan on your navel and make him create all the worlds. You shot the arrow that split open the chest of strong Thadagai and killed her and as the dark jewel of Kannapuram, you attract the hearts of all who see you. You are rule the lands in all the eight directions, O Raghava (Rāma), thālelo. thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புண்டரிக தாமரை; மலரதன்மேல் பூவின் மேல் தோன்றி; புவனி எல்லாம் உலகங்கள் எல்லாவற்றையும்; படைத்தவனே! படைத்தவனே!; திண் திறலாள் மிக்க திடமான; தாடகைதன் தாடகையின்; உரம் உருவ மார்பைத் துளைக்கும்படியாக; சிலை வில்லை; வளைத்தாய்! வளைத்து எய்தவனே!; கண்டவர் பார்த்தவர்கள்; தம் மனம் தங்கள் மனத்தை; வழங்கும் கொடுக்கும்; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும்; என் கருமணியே! நீலரத்னம் போன்ற எம்பெருமானே!; எண் திசையும் எட்டுத் திக்கையும்; ஆளுடையாய் ஆளுபவனே!; இராகவனே! தாலேலோ! ஸ்ரீராமனே! தாலேலோ!