PMT 5.10

நரகத்தை அடைய மாட்டார்கள்

697 விற்றுவக்கோட்டம்மா! நீவேண்டாயேயாயிடினும் *
மற்றாரும்பற்றிலேனென்று அவனைத்தாள்நயந்த *
கொற்றவேல்தானைக் குலசேகரன்சொன்ன *
நற்றமிழ்பத்தும்வல்லார் நண்ணார்நரகமே. (2)
697 ## vittuvakkoṭṭu ammā * nī veṇṭāye āyiṭiṉum *
maṟṟu ārum paṟṟu ileṉ ĕṉṟu * avaṉait tāl̤ nayantu **
kŏṟṟa vel-tāṉaik * kulacekaraṉ cŏṉṉa *
naṟṟamizh pattum vallār * naṇṇār narakame (10)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

697 Kulasekharan, with a victorious spear composed ten good Tamil pāsurams, expressing his deep love for Thirumāl , the lord of Vithuvakkodu, saying " Even if you do not give me your grace I have no other refuge than your feet. ” Those who learn and recite these ten excellent Tamil pāsurams of Kulasekharan will never go to hell.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! அம்மா!; நீ வேண்டாயே நீ என்னை; ஆயிடினும் விரும்பாவிடினும்; மற்று ஆரும் மற்ற எவரிடமும்; பற்று பற்று; இலேன் என்று கொள்ளமாட்டேன் என்று; அவனை அப்பிரானது; தாள் பாதங்களிலேயே; நயந்து ஆசை கொண்டு; கொற்ற வெற்றியைத் தரும்; வேல் வேலையும்; தானை சேனையையுமுடைய; குலசேகரன் குலசேகரர்; சொன்ன அருளிச்செய்த; நற்றமிழ் நல்ல தமிழ்ப்பாடல்கள்; பத்தும் பத்தையும்; வல்லார் அனுஸந்திப்பவர்கள்; நரகமே நரகம்; நண்ணார் சேரமாட்டார்கள்