PMT 4.9

படியாகக் கிடந்து பவளவாய் காண்பேன்

685 செடியாயவல்வினைகள் தீர்க்கும்திருமாலே! *
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின்வாசல் *
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய்காண்பேனே. (2)
685 ## cĕṭiyāya valviṉaikal̤ tīrkkum * tirumāle *
nĕṭiyāṉe veṅkaṭavā * niṉ koyiliṉ vācal **
aṭiyārum vāṉavarum * arampaiyarum kiṭantu iyaṅkum *
paṭiyāyk kiṭantu * uṉ paval̤avāy kāṇpeṉe (9)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

685. O Thirumal! You destroy the sins that have grown dense like bushes. O supreme One! The Lord of Thiruvenkatam hills! I wish to become a step at the threshold of your temple where devotees, the gods in the sky and the heavenly damsels throng and climb up to have your darshan and I will see your coral mouth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செடியாய புதர் போன்ற; வல்வினைகள் கொடிய வினைகளை; தீர்க்கும் திருமாலே! நீக்கும் திருமாலே; நெடியானே! பெரியோனே!; வேங்கடவா! வேங்கடமுடையானே!; நின் கோயிலின் உனது கோயிலின்; வாசல் வாசலிலே; அடியாரும் பக்தர்களும்; வானவரும் தேவர்களும்; அரம்பையரும் ரம்பை முதலிய தேவ கன்னியரும்; கிடந்து இயங்கும் இடைவிடாது நடந்து ஏறும்; படியாய்க் கிடந்து வாயிற்படியாய்க் கிடந்து; உன் பவளவாய் உனது பவழம் போன்ற அதரத்தை; காண்பேனே காண்பேனாக