PMT 4.8

வேங்கட மலையில் உள்ள வழியாக இருக்கவேண்டும்

684 பிறையேறுசடையானும் பிரமனுமிந்திரனும் *
முறையாயபெருவேள்விக் குறைமுடிப்பான்மறையானான் *
வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல் *
நெறியாய்க்கிடக்கும் நிலையுடையேனாவேனே.
684 piṟai eṟu caṭaiyāṉum * piramaṉum intiraṉum *
muṟaiyāya pĕru vel̤vik * kuṟai muṭippāṉ maṟai āṉāṉ **
vĕṟiyār taṇ colait * tiruveṅkaṭa malai mel *
nĕṟiyāyk kiṭakkum * nilai uṭaiyeṉ āveṉe (8)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

684. The god of Thiruvenkatam, helped Brahma, Indra and Shiva who carries the crescent moon on His matted hair, when they performed sacrifices. He is the meaning of the Vedas. I want to be a path on the Thiruvenkatam hills surrounded by cool fragrant groves, where He resides.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறை ஏறு பிறைச் சந்திரனை ஏற்று; சடையானும் முடியில் தரித்துள்ள சிவனும்; பிரமனும் பிரம்மாவும்; இந்திரனும் தேவேந்திரனும்; முறையாய முறைப்படி செய்யும்; பெரு வேள்வி பெரு வேள்வியில்; குறை அவர்கள் குறைகளை; முடிப்பான் தீர்த்து முடிப்பவனும்; மறை ஆனான் வேதமே வடிவாக ஆன; வெறியார் பரிமளம் மிக்க; தண் குளிர்ந்த; சோலை சோலையுடைய; திருவேங்கட திருவேங்கட; மலை மேல் மலை மீது செல்லும்; நெறியாய் பாதையாக; கிடக்கும் இருக்கின்ற; நிலை நிலையை; உடையேன் உடையவனாக; ஆவேனே ஆவேனே