PMT 4.5

வேங்கட மலையில் புதராக இருக்கவேண்டும்

681 கம்பமதயானைக் கழுத்தகத்தின்மேலிருந்து *
இன்பமரும்செல்வமும் இவ்வரசும்யான்வேண்டேன் *
எம்பெருமானீசன் எழில்வேங்கடமலைமேல் *
தம்பகமாய்நிற்கும் தவமுடையேனாவேனே.
681 kampa mata yāṉaik * kazhuttakattiṉmel iruntu *
iṉpu amarum cĕlvamum * iv aracum yāṉ veṇṭeṉ **
ĕmpĕrumāṉ īcaṉ * ĕzhil veṅkaṭa malai mel *
tampakamāy niṟkum * tavam uṭaiyeṉ āveṉe (5)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

681. I don't long for royalty, riches and the pleasure of riding on a frightening elephant with pride. I wish to have the blessing of being born as a pole or a thorny bush in the beautiful Venkatam hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கம்பம் நடுக்கத்தை விளைவிக்கும்; மத யானை மதங்கொண்ட யானையின்; கழுத்தகத்தின் கழுத்தின்; மேல் இருந்து மீது வீற்றிருந்து; இன்பு அமரும் அனுபவிக்கும்படியான; செல்வமும் செல்வத்தையும்; இவ் அரசும் இந்த அரசாட்சியையும்; யான் வேண்டேன் நான் விரும்பமாட்டேன்; எம்பெருமான் எம்பெருமான்; ஈசன் ஈசன் உள்ள; எழில் வேங்கட அழகிய; மலை மேல் திருமலை மீது; தம்பகமாய் கம்பமாக புதராக; நிற்கும் நின்றிடும்; தவம் உடையேன் பாக்கியத்தை; ஆவேனே பெறக் கடவேன்