PMT 4.11

பகவானின் பக்தர்களாக ஆவர்

687 மன்னியதண்சாரல் வடவேங்கடத்தான்தன் *
பொன்னியலும்சேவடிகள்காண்பான் புரிந்திறைஞ்சி *
கொன்னவிலும்கூர்வேல் குலசேகரன்சொன்ன *
பன்னியநூல்தமிழ்வல்லார் பாங்காயபத்தர்களே.
687 ## maṉṉiya taṇ cāral * vaṭa veṅkaṭattāṉ taṉ *
pŏṉ iyalum cevaṭikal̤ * kāṇpāṉ purintu iṟaiñci **
kŏl navilum kūrvel * kulacekaraṉ cŏṉṉa *
paṉṉiya nūl tamizh vallār * pāṅkāya pattarkal̤e (11)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

687. Wishing to see the golden shining feet of the lord , Kulasekharan with a sharp spear that kills his enemies worshipped the god of Thiruvenkatam hills, that has cool lovely slopes and composed pāsurams praising Him. If Tamil scholars learn these pāsurams of Kulasekharan well, they will become austere devotees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொல் பகைவரை வெல்வதில்; நவிலும் தேர்ச்சி பெற்ற; கூர்வேல் கூர்மையான வேலையுடைய; குலசேகரன் குலசேகராழ்வார்; மன்னிய தண் மாறாத குளிர்ச்சியுள்ள; சாரல் சாரல்களையுடைய; வட வேங்கடத்தான் வடவேங்கடத்தில் இருக்கும்; தன் எம்பெருமானது; பொன் இயலும் பொன்போன்ற சிவந்த; சேவடிகள் திருவடிகளை; காண்பான் புரிந்து காண்பதற்கு ஆசைப்பட்டு; இறைஞ்சி சொன்ன துதித்துச் சொல்லிய; பன்னிய நன்கு அமைந்த இந்த; நூல் தமிழ் தமிழ் பாசுரங்களை; வல்லார் அனுஸந்திப்பவர்கள்; பாங்காய பெருமானின் மனதிற்கினிய; பத்தர்களே பக்தர்களாவர்