அவதாரிகை –
கிட்டும் அளவும் வேண்டா என்கிறீர் – கிட்டின வாறே அனுபவிக்கிறீர் என்ன -அவை கிட்டினாலும் வேண்டா என்கிறார் –
உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன் அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–
பதவுரை
உம்பரு உலகு–மேலுலகங்களை யெல்லாம் ஒரு குடை கீழ்–ஒரு கொற்றக் குடையின் நிழலிலே