PMT 2.9

தொண்டர்கள் பித்தர்கள் அல்லர்

666 மொய்த்துக்கண்பனிசோரமெய்கள்சிலிர்ப்ப ஏங்கி யிளைத்துநின்று *
எய்த்துக்கும்பிடுநட்டமிட்டெழுந்து ஆடிப்பாடியிறைஞ்சி * என்
அத்தனச்சனரங்கனுக்கு அடியார்களாகி * அவனுக்கே
பித்தராமவர்பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும்பித்தரே.
666 mŏyttuk kaṇ paṉi cora mĕykal̤ cilirppa * eṅki il̤aittu niṉṟu *
ĕyttuk kumpiṭu naṭṭam iṭṭu ĕzhuntu * āṭip pāṭi iṟaiñci ĕṉ **
attaṉ accaṉ araṅkaṉukku aṭi yārkal̤ āki * avaṉukke
pittarām avar pittar allarkal̤ *
maṟṟaiyār muṟṟum pittare (9)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

666. The devotees of Rangan, my lord and father, as they shed tears of joy, tremble, long for him in their hearts worship, dance and sing. They seem mad but they are not. It is those people who do not worship, dance, sing and praise him who are truly mad.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்பனி ஆனந்தக்கண்ணீர்; மொய்த்து சோர பக்தியால் பொழிய; மெய்கள் உடல்; சிலிர்ப்ப மயிர் கூச்செறியவும்; ஏங்கி இளைத்து நெஞ்சு தளர்ந்து; நின்று எய்த்து களைத்துப் போய்; கும்பிடு நட்டம் ஆனந்தமாக நர்த்தனம்; இட்டு எழுந்து பண்ணி எழுந்து; ஆடிப் பாடி இறைஞ்சி ஆடிப் பாடி வணங்கி; என் அத்தன் எனக்குத் தந்தையும்; அச்சன் ஸ்வாமியுமான; அரங்கனுக்கு அரங்கனுக்கு; அடியார்கள் ஆகி அடியவர்களாய்; அவனுக்கே அவனிடமே; பித்தராம் பித்தராக இருக்கும்; அவர் அவர்கள்; பித்தர் பைத்தியக்காரர்; அல்லர்கள் இல்லை; மற்றையார் பக்தியற்றவர்கள் எல்லாம்; முற்றும் முழுமையான; பித்தரே பைத்தியம் பிடித்தவர்களே