PAT 5.4.9

என்னை உனக்கு உரித்தாக்கினாய்

471 பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு * ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ! *
தனிக்கடலே! தனிச்சுடரே! தனியுலகே! என்றென்று *
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2)
471 paṉik kaṭalil pal̤l̤i- kol̤aip * pazhakaviṭṭu * oṭivantu ĕṉ
maṉak kaṭalil vāzha valla * māya maṇāl̤a nampī ! **
taṉik kaṭale taṉic cuṭare! * taṉi ulake ĕṉṟu ĕṉṟu *
uṉakku iṭamāy irukka * ĕṉṉai uṉakku urittu ākkiṉaiye (9)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

471. Leaving your snake bed on the cool ocean, You have hastened to come and reside in the ocean of my heart. You are the beloved of Lakshmi! O! Unique ocean! (of eternal grace and compassion) Unique Light! Unique world! The entire cosmos ( all places) is yours. You made my heart your abode and you own me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பனிக் கடலில் குளிர்ந்த திருப்பாற்கடலில்; பள்ளிகோளை சயனிப்பதை; பழக விட்டு மறந்துவிட்டு; ஓடி வந்து ஓடி வந்து; என் மன என்னுடைய இருதயமாகிற; கடலில் கடலில்; வாழ வல்ல வாழ வல்ல வாஸுதேவனே!; மணாள நம்பீ! திருமகளின் நாயகனே!; தனிக் கடலே! ஒப்பற்ற திருப்பாற்கடலே!; தனிச் சுடரே! ஒப்பற்ற சூர்யமண்டலமே!; தனி உலகே! ஒப்பற்ற பரமபதமே!; என்று என்று என்று என்று சொல்லுவதெல்லாம்; உனக்கிடமாய் உனக்கு இருப்பிடமாய்; இருக்க என்னை இருக்க என்னை; உனக்கு உரித்து உனக்கு சொந்தமாக; ஆக்கினையே ஆக்கிக் கொண்டாயே! என்று ஈடுபடுகிறார்
paḻaka viṭṭu forgetting to; pal̤l̤ikol̤ai rest; paṉik kaṭalil in the cool, sacred ocean; oṭi vantu You came running; ĕṉ maṉa my heart, which is; kaṭalil like an ocean; vāḻa valla o Vasudeva, who is capable of living there; maṇāl̤a nampī! o Lord of Goddess Lakshmi!; taṉik kaṭale! o matchless divine Ocean!; taṉic cuṭare! o matchless Solar rays!; taṉi ulake! o matchless Supreme Abode; ĕṉṟu ĕṉṟu all these things said again and again; ākkiṉaiye You made me; uṉakku urittu Your own; irukka ĕṉṉai and made me; uṉakkiṭamāy Your dwelling place