PAT 5.4.6

உன் விக்கிரமங்களை என் நெஞ்சில் எழுதிக்கொண்டேன்

468 உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம் *
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன் *
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ! *
என்னிடைவந்துஎம்பெருமான்! இனியெங்குப்போகின்றதே?
468 uṉṉuṭaiya vikkiramam * ŏṉṟu ŏzhiyāmal ĕllām *
ĕṉṉuṭaiya nĕñcakampāl * cuvarvazhi ĕzhutikkŏṇṭeṉ **
maṉ aṭaṅka mazhu valaṅkaik kŏṇṭa * irāma nampī ! *
ĕṉṉiṭai vantu ĕmpĕrumāṉ * iṉi ĕṅkup pokiṉṟate? (6) 6

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

468. I have etched all Your omnipotent deeds in the walls of my heart, like drawings. You took the form of ParasuRāman, holding an axe in the right hand to destroy arrogant kings. You are my Lord, residing in me. Where else can You go? ( now that I have caught You in my heart)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உன்னுடைய உன்னுடைய; விக்கிரமம் வீரச் செயல்களில்; ஒன்று ஒழியாமல் ஒன்று விடாமல்; எல்லாம் எல்லாவற்றையும்; என்னுடைய என்னுடைய; நெஞ்சகம்பால் நெஞ்சிலே; சுவர் சுவரில்; வழி சித்திரம் வரைவதுபோல; எழுதிக் கொண்டேன் எழுதிக்கொண்டேன்; மன் அடங்க துஷ்டர்கள் அழியும்படி; மழு மழு என்னும் ஆயுதத்தை; வலங்கை வலக்கையில்; கொண்ட ஏந்தியிருக்கும்; இராம பரசுராமனாய்; நம்பீ! அவதரித்த பிரானே!; எம்பெருமான்! எனக்குத் தலைவனே!; என்னிடை வந்து என்னிடத்தில் வந்த பிறகு; இனி எங்கு இனி எங்கே; போகின்றதே போகப்போகிறாய்
vaḻi like drawing a picture; cuvar on the wall; ĕḻutik kŏṇṭeṉ I wrote down; ĕllām all of; uṉṉuṭaiya Your; vikkiramam heroic deeds; ŏṉṟu ŏḻiyāmal without leaving a single one; ĕṉṉuṭaiya in my; nĕñcakampāl heart; nampī! oh Lord who incarnated as; irāma Parasurama; kŏṇṭa holding; maḻu the axe as a weapon; valaṅkai in the right hand; maṉ aṭaṅka to destroy the wicked; ĕmpĕrumāṉ! oh my Lord!; ĕṉṉiṭai vantu after coming to me; iṉi ĕṅku now where; pokiṉṟate are you going