PAT 5.4.11

அணுக்கர் ஆவர்

473 வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே *
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை *
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை *
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2)
473 ## veyar taṅkal̤ kulattu utitta * viṭṭucittaṉ maṉatte *
koyilkŏṇṭa kovalaṉaik * kŏzhuṅkul̤ir mukilvaṇṇaṉai **
āyar-eṟṟai amarar kovai * antaṇar tam amutattiṉai *
cāyai polap pāṭa vallār * tāmum aṇukkarkal̤e (11)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

473. Vishnuchithan, born in the Veyar tribe, praises Him, the cowherd, the beautiful cool cloud-colored lord, the bull of the cowherds, the king of gods and the nectar of the sages. Those who sing Vishnuchittan's pāsurams will remain close to the lord as His shadows.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேயர் தங்கள் வேதியர்களுடைய; குலத்து உதித்த குலத்தில் தோன்றிய; விட்டுசித்தன் பெரியாழ்வாருடைய; மனத்தே மனதில்; கோயில் கொண்ட கோயில் கொண்டுள்ள; கோவலனை கோபாலனை; கொழுங்குளிர் வளப்பமிக்க குளிர்ந்த; முகில் மேகம் போன்ற; வண்ணனை நிறமுடையவனை; ஆயர் ஏற்றை ஆயர்களுக்குத் தலைவனை; அமரர் நித்யசூரிகளுக்கு; கோவை ஸ்வாமியை; அந்தணர் தம் முனிவர்களுக்கு; அமுதத்தினை அமுதம் போன்ற பெருமானை; பாட வல்லார் தாமும் பாடவல்லவர்கள்; சாயை போல பெருமானுக்கு நிழல்போல; அணுக்கர்களே சதா அணுகி இருப்பர்
kovalaṉai Gopala (Krishna); koyil kŏṇṭa dwells; maṉatte in the heart of; viṭṭucittaṉ Periazhwar; kulattu utitta who is born in the lineage of; veyar taṅkal̤ vedic scholars; vaṇṇaṉai He has the complexion that of; kŏḻuṅkul̤ir a graceful and cool; mukil cloud; āyar eṟṟai He is the leader of the cowherds; kovai the Supreme Lord; amarar of the eternal celestial beings; amutattiṉai He is the nectar; antaṇar tam to the sages; pāṭa vallār tāmum those who are capable of singing His praise; aṇukkarkal̤e will always remain close to Him; cāyai pola like His shadow